நீட் தேர்வு முடிவு வெளியீடு : டாப் 100ல் தமிழக மாணவர்கள்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ,தேசிய தேர்வுகள் முகமையால் (NTA) வெளியிடப்பட்டன
நீட் தேர்வு முடிவு வெளியீடு : டாப் 100ல் தமிழக மாணவர்கள்
ANI
1 min read

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு மே 4ம் தேதி நடைபெற்றது.

சுமார் 22.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதினர்.

இதனையடுத்து நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதன் முடிவுகளை neet.nta.nic.in, exams.nta.ac.in ஆகிய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் தகவல்களை தங்களின் மின்னஞ்சல் மூலமாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது.

தேர்வில் தகுதி பெற்றவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஸ் மற்றும் பிற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

நீட் தேர்வு முடிவுகளில் டாப் 100ல் தமிழக மாணவர்கள் 6 பேர் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

சூர்ய நாராயணன் என்பவர் தேசிய அளவில் 27ம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து 76,181 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in