இளைஞர்களின் ஆதரவு நேபாளத்தில் புதிய மாற்றம்
Nepal PM Balen Balendra Shah sworn in as Nepal Prime Minister : இந்தத் தேர்தலில், இளைஞர்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி ஆர்எஸ்பி வரலாற்று வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில்,
ஆர்எஸ்பி கட்சியின் 125 உறுப்பினர்கள் நேரடியாக வெற்றி பெற்றதை அடுத்து அங்கு
ஆர்எஸ்பி களம் காணுகிறது .
புதிய ஆட்சி அமைக்கும் ஆர்எஸ்பி
பிரதிநிதித்துவ முறையில் 57 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 182 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆர்எஸ்பி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது
வெற்றிபெற்றவர்கள் பதவியேற்பு
நேபாள நாடாளுமன்றத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 275 உறுப்பினர்களும் பதவியேற்றுள்ளதை தொடர்ந்து ,புதிதாக களம் காணும் பாலேந்திர ஷாவும் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
மேலும் படிக்க :35 வயதில் நேபாளத்தின் பிரதமர் : யார் இந்த ராப் சிங்கர் பாலேந்திர ஷா!
50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அவருக்கு நேபாள அதிபர் ராம் சந்திர பௌடெல் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
நேபாள தேர்தலில் முன்னாள் பிரதமர் சர்மா ஓலியை எதிர்த்து ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.