தேசிய கீதத்துக்கு இணையாக வந்தே மாதரம் : ”அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை” : ராஜ்யசபாவில் மசோதா தாக்கல்...!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
new bill proposing a prison sentence of up to 3 years for disrespecting  'Vande Mataram' song
new bill proposing a prison sentence of up to 3 years for disrespecting 'Vande Mataram' song AI generated
1 min read

வந்தே மாதரம் மசோதா தாக்கல்

MoS Nityanand Rai tables National Honour (Amendment) Bill in Rajya Sabha amid Oppn sloganeering

தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா, 2026 (Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) என்ற பெயரிலான இந்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தாக்கல் செய்தார்.

3 ஆண்டுகள் வரை சிறை

தேசியப் பாடலான வந்தே மாதரத்தைப் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதித்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் ஆகியவை மசோதாவில் இடம்பெற்று இருக்கின்றன.

தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்து

தேசிய கீதம், தேசியக் கொடி போன்ற தேசிய சின்னங்களுக்கு இணையான சட்டப் பாதுகாப்பை தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' வழங்குதல் இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.

அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம்

அரசு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலை அவமதிப்பது குற்றமாக கருதப்படும்.

150 ஆண்டுகள் நிறைவு

பக்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட தேசிய பாடலான வந்தே மாதரம், வெளியாகி 150 ஆண்டுகள் ஆகிறது. இதனை நினைவு கூறும் வகையில் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் பாடப்படுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது.

அரசு நிகழ்ச்சியின் துவக்கம் மற்றும் இறுதியில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ பாதுகாப்பு

சட்டப்பூர்வ பாதுகாப்பை இப்பாடலுக்கும் வழங்கும் நோக்கில் 1971-ஆம் ஆண்டு சட்டத்தில் இத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in