UPI பணப்பறிமாற்றதில் அதிரடி நடவடிக்கை
இதற்கு முன்னர் யுபிஐ (UPI) வழியாக பெரும்பாலான தினசரி பரிமாற்றங்களுக்கான வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (Unified Payments Interface) அரசு பணப்பரிவர்த்தனைகளுக்காக (government payments) ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கை தற்போது அறிவித்துள்ளது
அரசு பணப்பரிவர்த்தனைகள் புதிய மாற்றம்
அரசு பணப்பரிவர்த்தனைகள் இதன்கீழ் வரி செலுத்துவோர்கள் இப்போது வருமான வரி மற்றும் பிற அரசு நிலுவைகளுக்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் செலுத்து வசதி இருந்து வந்தது, இதனை நீட்டிக்கும் வகையில் புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது
புதுபிக்கப்பட்ட பணப்பரிவர்தனை
புதுப்பிக்கப்பட்ட 2026 பணப்பரிவர்தனை வழிகாட்டுதல்களின்படி, வருமான வரித் துறை உட்பட அரசு துறையில் உள்ள சரிபார்க்கப்பட்ட வணிகர்கள், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் என்ற உயர்த்தப்பட்ட வரம்பிற்கு தகுதி பெறுகிறார்கள். இது, பயனர்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பீம் (BHIM) போன்ற ஆப்கள் மூலம் கணிசமான வரிப்பொறுப்புகளை உடனடியாக செலுத்த அனுமதிக்கிறது.
உங்கள் வங்கி கணக்கு நிராகரிக்கப்படாமல் இருக்க
உங்களுடைய அதிக மதிப்புள்ள வரி செலுத்துதல் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய 3 விஷயங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும். ஒன்று - வங்கியின் வரம்புகளை சரிபார்க்கவும்: முதலில் "அரசு / வரி" பிரிவுகளுக்கான உயர்த்தப்பட்ட ரூ.5 லட்சம் வரம்பை உங்கள் குறிப்பிட்ட வங்கி ஆதரிக்கிறதா என்பதை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கிறது
மேலும் நீங்கள் சமீபத்தில் உங்கள் யுபிஐ பின் நம்பரை மாற்றியிருந்தால் அல்லது ஒரு புதிய வங்கி கணக்கை இணைத்திருந்தால், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனையை முயற்சிப்பதற்கு முன் 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறது .
ரூ.5 லட்சம் எற்கனவெ உள்ள பணப் பரிமாற்றங்கள்
இந்த டிஜிட்டல் உந்துதலால் பயனடைவது வருமான வரித் துறை மட்டுமல்ல. என்பிசிஐ ஆனது தினசரி ரூ.5 லட்சம் வரம்பை மற்ற முக்கிய துறைகளுக்கும் நீட்டித்துள்ளது: முதலில் உள்ளது சுகாதாரம் - சரிபார்க்கப்பட்ட மருத்துவமனைகளுக்கான பேமெண்ட்களுக்கான லிமிட் ரூ.5 லட்சம் ஆக உள்ளது.
இதேபோல கல்விக்கும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கும் யுபிஐ லிமிட் ரூ.5 லட்சம் ஆகவே இருந்து வருகிறது .இதேபோல ஐபிஓ-க்கள் (IPO) மற்றும் ஆர்பிஐ ரீடெய்ல் டைரக்ட் திட்டங்களில் முதலீடுகள் செய்யும் போது
இந்த லிமிட்டை எட்டலாம். இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலமைப்பு முதிர்ச்சியடையும்போது, இந்த உயர் வரம்புகள், காகிதவழி பரிவர்த்தனைகள் மற்றும் மெதுவான வங்கி இடைமுகங்கள் மீதான நாட்டின் சார்புநிலையை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UPI பயன்பாட்டை உலகளவில் ஒருங்கிணைக்கும் செயல்
யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை என்பிசிஐ (NPCI), தற்போது வியட்நாமின் பாஸ்ட் பேமண்ட் சிஸ்டம் உடன் யுபிஐ (UPI) சேவையை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
துபாய் போன்ற நாடுகளில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிதி செல்வாக்கிற்கு (Financial influence) இந்த நடவடிக்கை மற்றுமொரு மகுடமாக விளங்குகிறது.
==========