VIVO T4 Pro 5G: விவோ டி4 புரோ ஸ்மார்ட்போன் : இந்தியாவில் அறிமுகம்

New Vivo T4 Pro 5G Smartphone Launched in India : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.
New Vivo T4 Pro 5G Smartphone Launched in India
New Vivo T4 Pro 5G Smartphone Launched in India
1 min read

சீனாவின் விவோ நிறுவனம் :

New Vivo T4 Pro 5G Smartphone Launched in India : சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ ( VIVO), உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.

உலக சந்தையில் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் நவீன அம்சங்களுடன் புதிய மாடல் போன்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது.

T4R ஸ்மார்ட்போன் அறிமுகம் :

அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்களுக்கு இந்திய பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது.

2021ல் டி1 மாடல் அறிமுகமானது. தொடர்ந்து டி2 மற்றும் டி3 மாடல்களின் வேரியன்ட்கள் அறிமுகமாகின. கடந்த ஏப்ரல் மாதம் டி4 மாடல் அறிமுகமானது. தற்போது டி4 மாடலில் ஒரு வேரியன்டான டி4 புரோ அறிமுகமாகி உள்ளது.

விவோ T4 புரோ 5G சிறப்பு அம்சங்கள் :

* 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே

* ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

* ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 4 சிப்செட்

* 8ஜிபி / 12ஜிபி ரேம்

* 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்

* 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

* 50 + 2 + 50 மெகாபிக்சல் என மூன்று கேமரா

* 6,500mAh பேட்டரி

* 90 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

* ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்

* 5ஜி நெட்வொர்க்

* யுஎஸ்பி டைப்-சி போர்ட்

விவோ டி4 புரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.27,999 :

இந்த போனின் விலை ரூ.27,999 முதல் தொடங்குகிறது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும் படிக்க : ஸ்மார்ட்போன் மூலம் வாக்குப்பதிவு : பீகார் தேர்தலில் அறிமுகம்

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in