காவிரி நீர் விவகாரத்தில் புதிய குரல் : மாநிலங்களை இணைக்கவே நதிநீர் பயன்பட வேண்டும்" : டி.கே. சிவகுமார் பேச்சு.!

நதிநீர் பகிர்வு பிரச்சினைகள் அரசியல் மோதலாக மாறக்கூடாது; மாநிலங்களின் நல்லுறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வழியாக இருக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் கூறியுள்ளார்.
New Voice in the Cauvery Water Dispute: River Water Should Unite States, Not Divide Them – D.K. Shivakumar
New Voice in the Cauvery Water Dispute: River Water Should Unite States, Not Divide Them – D.K. ShivakumarAi Generated
1 min read

மக்களவைத் தொகுதி மறுவரை குறித்து அவர் பேசியது:

மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தற்போதுள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் தொடர வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

தண்ணீர் மாநிலங்களைப் பிரிப்பதற்கு பதிலாக ஒன்றிணைக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல், மாநில பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் இதில் விவாதிக்கப்பட்டது

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியது :

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணாறு மற்றும் பாலாறு ஆகியவை தென்னிந்தியாவின் உயிர்நாடிகள் என்றும், நதிகள் அரசியல் எல்லைகளை அங்கீகரிப்பதில்லை என்றும் கூறினார். எனவே, தண்ணீர் மாநிலங்களைப் பிரிப்பதற்கு பதிலாக ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நீரைப் பகிர்ந்து கொள்வது என்ற நிலையைத் தாண்டி, மாநிலங்களுக்கு இடையே நீர்வள ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் சிவகுமார் தெரிவித்தார்.

மாநிலங்களிடையே நீரை பகிர்வதில் ஒற்றுமை வேண்டும் :

ஒவ்வொரு நதிக்கரை மாநிலத்துக்கும் நியாயமான தேவைகள் உள்ளதை கர்நாடகா ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அவர், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் நீர்வள விவகாரங்களை அணுக வேண்டும் என்றார்.

அதேநேரத்தில், ஒத்துழைப்பு என்பது இரு தரப்பிலும் இருக்க வேண்டும் என்றும், கர்நாடகாவின் உரிமைகள், தீர்ப்பாய உத்தரவுகளின் கீழ் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பங்கு மற்றும் விவசாயிகளுக்கான நீர்வளத் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசியது:

இதையடுத்து, தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தி, அதே எண்ணிக்கைக்குள் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என தென் மாநில முதல்வர்களுக்கு டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்தார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in