அமலுக்கு வரும் புதிய முறை
NHAI Guidelines for Toll Plaza New Rules in India : சுங்க சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இந்த ‘தடையில்லா சுங்கச்சாவடி’ முறையை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது .
இது இரண்டு புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
FASTag முறை
நடைமுறையில் இருக்கும் ‘ஃபாஸ்ட் டேக்’ முறையில் வாகனங்கள் சுங்கச் சாவடியில் நின்று செல்ல வேண்டும். ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய முறைப்படி வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நிற்கத் தேவையில்ல.
இது நீண்ட காத்திருக்கும் முறைக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது
தடையில்லா சுங்கச்சாவடி பயண முறை
சாலைகளின் மேலே பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன கேமராக்கள் (ANPR - Automatic Number Plate Recognition) வேகமாக செல்லும் வாகனங்களில் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கும்.
இந்த கேமராக்கள் வாகனங்கள் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் அதன் பதிவு எண்ணை அடையாளம் கண்டு அதிலிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது
இரண்டாவது முறையில் GNSS (Global Navigation Satellite System) செயற்கைக்கோள் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் வாகனம் நெடுஞ்சாலையில் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறது என்பது கணக்கிடப்படும்.
புதிய நடைமுறையின் நன்மைகள்
இந்த புதிய முறையால் சுங்க சாவடிகளில் வரிசையில் நீண்ட தூரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதுமானது.
பண்டிகை காலங்களில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் பெரும் போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் பெருமளவிற்கு குறைந்து எளிமையான பயண முறை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விதிகளை மீறினால் என்ன நடக்கும்?
சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்பவர்கள் அல்லது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
நெடுஞ்சாலை துறையின் வழிகாட்டுதலின் படி விதிகளை மீறுபவர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்துடன் அபராதங்கள் விதிக்கப்படும். இந்த விவரங்கள் தேசிய வாகன பதிவுத்துறையில் பதிவேற்றம் செய்யப்படும்.