

வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிப்பு:
நாட்டில் ஒவ்வரு ஆண்டும் கோடிக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்
எனவே சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் "நிதி ஆயோக்" ஒரு அதிர்ச்சிகர தகவல்களை தந்திருக்கிறது அதில் நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் சுமார்8.1கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.
NEET’ நிலையில் கோடிக்கணக்கான இளைஞர்கள் :
கல்வி, வேலை அல்லது பயிற்சி ஆகிய மூன்றிலும் இல்லாத இளைஞர்கள் சர்வதேச அளவில் NEET (Not in Employment, Education or Training) என அழைக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் இந்த பிரிவில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 8.7 கோடியாக இருப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் திறன் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை காட்டுகிறது.
பெண்களிடையே அதிக பாதிப்பு :
இந்த பிரிவில் இளம் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதாக நிதி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது.
குடும்பப் பொறுப்புகள், கல்வியைத் தொடர முடியாமை, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளம் பெண்கள் கல்வி மற்றும் வேலைச் சந்தையிலிருந்து விலகும் நிலை காணப்படுகிறது.
வேலைவாய்ப்பு சந்தையில் திறன் முக்கியம் :
இந்தியாவின் இளம் மக்கள் தொகை நாட்டின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது. ஆனால், இளைஞர்கள் கல்வி அல்லது வேலைவாய்ப்பு சந்தையில் இணையாமல் இருந்தால், இந்த மக்கள் தொகை பலனை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம்.
எனவே, தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்கும் வகையில் தொழில்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களை வேலைவாய்ப்புடன் இணைக்க வேண்டிய அவசியம் :
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, வேலை தேடும் இளைஞர்களுக்கு தேவையான திறன்களை வழங்குதல், தொழில்பயிற்சியை எளிதாக அணுகும் வகையில் ஏற்பாடுகளை செய்தல் போன்ற நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக இளைஞர்கள் திறன் மேம்பாட்டில் பின்தங்கியுள்ளனர் .