பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் : 45 வயது இளம் தலைவர், சமூக ஆர்வலர்

Nitin Nabin BJP President : பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். பிகாரை சேர்ந்த 45 வயதாகும் அவர், நிதிஷ் அரசில் அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
Nitin Nabin has been appointed as the national working president of the Bharatiya Janata Party
Nitin Nabin has been appointed as the national working president of the Bharatiya Janata PartyGoogle
2 min read

பாரதிய ஜனதா தலைவர்

Nitin Nabin BJP Working President News in Tamil : பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா, 2020ம் ஆண்டு பொறுப்பேற்றார். பாஜக விதிகளின்படி கட்சி தலைவர் பதவி என்பு மூன்று ஆண்டுகள். 2024 மக்களவை தேர்தலை ஒட்டி அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.

பாஜக தலைவர் பரிசீலனை

பிகார் தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவராக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிவராஜ் சிங் சௌகான், நிதிஷ் கட்கரி, நிர்மலா சீதாராமன், புரந்தரேஸ்வரை நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

தேசிய செயல் தலைவர் நிதின் நபின்

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக, நிதின் நபின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ” கடின உழைப்பாளி என்பதை அவர் நிரூபித்துள்ளார். பரந்த அனுபவமுள்ள நிதின், இளம் மற்றும் சுறுசுறுப்பான தலைவர். பிகாரில் எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் திறம்பட பணியாற்றி உள்ளார். நிதின் நபினின் ஆற்றலும், அர்ப்பணிப்பும் வரும் காலங்களில் நம் கட்சிக்கு பலம் சேர்க்கும்.என்று குறிப்பிட்டுள்ளார்.

45 வயதில் தலைவர் பதவி

மிக இளம் வயதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்கும் நிதின் நபின், அரசியல்வாதியும் சமூக ஆர்வலருமான பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நபின் கிசோர் சின்காவின் மகன். பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து நான்கு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 பிகார் சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 84,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நிதிஷ் அரசில் அமைச்சர்

கடந்த தேர்தலில் சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்காவை இவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புட்பம் பிரியா சவுத்ரியும் இந்தத் தேர்தலில் இவரிடம் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், பாங்கிபூர் தொகுதியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை உறுதி செய்தார்.

பாஜக வெற்றியில் முக்கிய பங்கு

பிகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு இவர் எடுத்த தீவிர முயற்சிகளே முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்ற இவர் ஆற்றிய பணி அளப்பறியது.

பாஜக அமைப்புப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்டவராகக் கருதப்படும் நிதின் நபின், பிகாரில் கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். அதற்கு பரிசாகவே பாரதிய ஜனதா தேசியத் செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது.

அமைச்சராக நிதின் நபின்

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசில், சாலை கட்டுமானத்துறை அமைச்சராக நிதின் நபின் பதவி வகிக்கிறார். ஏப்ரல் 2026ல் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிதின் நபினை தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் வழங்கும்.

2026 தேர்தல்களில் வழிகாட்டுதல்

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. செயல் தலைவர் நிதின் நபின் வழிகாட்டுதலின்படி இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளில் பாஜக ஈடுபடும்.

நிதின் நபினின் இந்த நியமனம் முக்கிய அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாக கருதப்படுகிறது. தேசிய பணிநிர்வாகத் தலைவர் என்ற முறையில், மத்திய தலைமையையும் மாநிலக் கட்சிகளையும் இணைக்கும் பாலமாக அவர் செயல்படுவார்.

நாடு முழுவதும் பாஜக அரசியல்–தேர்தல் உத்திகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை நிதின் நபின் வழிநடத்த இருக்கிறார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in