NItish Kumar : "ராஜ்யசபா எம்பி + மத்திய அமைச்சர்" : முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் ராஜினாமா : லாலு சாதனை முறியடிப்பு

மாநிலங்களவை உறுப்பினராகும் நிதிஷ்குமார், பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
Nitish Kumar, to become Rajya Sabha member, has resigned Chief Minister of Bihar
Nitish Kumar, to become Rajya Sabha member, has resigned Chief Minister of BiharANI twitter
2 min read

பிகாரின் முகம் நிதிஷ்குமார்

Nitish Kumar Announces Rajya Sabha Plan, Spells Out A '4-House Club' Desire : பிகார் மாநிலத்தில் முகமாக அறியப்படுபவர் நிதிஷ்குமார். நீண்ட அவரது அரசியல் பயணம் சாதனைகளை படைத்து இருந்தாலும், விமர்சனங்களுக்கும் பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. மாறிமாறி கூட்டணி என்பது அவரது பலவீனமாக எதிர்க்கட்சிகள் குறை கூறினாலும், அதையும் தனது பலமாக மாற்றிக் காட்டியவர் நிதிஷ்குமார்.

10 முறை முதலமைச்சர்

10 முறை பிகார் முதல்வர் என்ற அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. இப்போது முதன்முறையாக ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார் நிதிஷ்குமார். இதற்காக முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.

பிகார் மக்களுக்கு நன்றி

முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது பற்றி, அவர் வெளியிட்டு இருக்கும் சமூக ஊடக பதிவில், ‘‘இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து உங்கள் ஆதரவை அளித்து வருகிறீர்கள்.

மக்களால் பிகார் வளர்ச்சி

இந்த வலிமையால் நாங்கள் பிகாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழுமையான விசுவாசத்துடன் சேவை செய்து வருகிறோம். உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் காரணமாகவே பிகார்று வளர்ச்சியுடன் கூடிய மரியாதையின் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. இதற்காக நான் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜ்யசபா செல்ல ஆசை

எனது பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து பிகார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று நான் விரும்பினேன். அது நிறைவேறியது. எனவே, இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

பிகாருக்கு எனது சேவை தொடரும்

பிகார் மக்களுடனான எனது இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும், வளர்ச்சி அடைந்த பிகாரை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். பிகாரில் அமைய உள்ள புதிய அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்‘‘ என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா செல்லும் நிதிஷ்குமார்

மாநிலங்​களவை தேர்​தலில் பிகால் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்​களில் வெற்றி பெறும் நிலை​யில் உள்​ளது. ஒன்​றில் நிதிஷ்குமாரும் மற்றொன்றில் மத்திய அமைச்சர் ராம்​நாத் தாக்​கூரும் போட்டியிட உள்ளனர்.

நிதிஷ் மகன் துணை முதல்வர்

அடுத்த முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சராகும் நிதிஷ்

ராஜ்யசபா எம்பியான பிறகு நிதிஷ் குமார் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்​கின்​றன.

லாலு சாதனை - நிதிஷ் முறியடிப்பு

பிகார் சட்டமன்ற இரு அவைகளிலும் இடம்பெற்ற நிதிஷ், ஏற்கனவே மக்களவை எம்பியாகவும் இருந்து இருக்கிறார். தற்போது ராஜ்யசபாவுக்கும் செல்வதால், லாலு பிரசாத், சுஷில் மோடி ஆகியோர் வைத்திருந்த அரிய சாதனை பட்டியலில் நிதிஷ்குமாரும் இணைகிறார்.

=======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in