Petrol, Diesel Shortage : எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது : வதந்திகளை நம்ப வேண்டாம், எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்!

Petrol, Diesel Shortage in Chennai : எல்பிஜி மறு நிரப்புதல் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றங்கள் இருப்பதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்று விளக்கமளித்துள்ளது.
No Petrol,Diesel Shortage: Do Not Believe Rumors — Public Sector Oil Companies Clarify!
No Petrol,Diesel Shortage: Do Not Believe Rumors — Public Sector Oil Companies Clarify!source : google
1 min read

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்!

Petrol, Diesel Shortage in Chennai : நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்

தயவுசெய்து அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புங்கள் மற்றும் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவை கேட்டுக்கொண்டுள்ளன.

பாரத் பெட்ரோலியம் விளக்கம்

எரிபொருள் இருப்பு குறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

ஆதாரமற்ற வதந்திகள்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்தியா எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நிலையில் உள்ளது.

நம்மிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) ஆகியவை தாராளமாக கையிருப்பில் உள்ளன.

தடையற்ற விநியோகம்

எரிபொருள் விநியோகச் சங்கிலி எவ்வித பாதிப்புமின்றி சீராக இயங்கி வருகிறது. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து அவசரமாக எரிபொருளைச் சேமிக்க வேண்டாம்.

இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உறுதி

இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விற்பனை நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளது.

இணையத்தில் பரவும் வதந்திகள் இயல்பான விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை

இதேபோல், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறுவதாகவும், பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் வேண்டாம்

நாட்டில் எரிபொருள் இருப்பு போதுமான அளவு உள்ளது. வதந்திகளால் தூண்டப்பட்டு பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் கூட்டமாக கூடுவதையோ அல்லது தேவையின்றி கூடுதலாக எரிபொருளை வாங்கி வைப்பதையோ தவிர்க்க வேண்டும் என்பதே இந்த நிறுவனங்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

மேலும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எல்பிஜி மறு நிரப்புதல் முன்பதிவு நேரங்கள். செய்திகளின் சில பிரிவுகளிலும் சமூக ஊடகங்களிலும் எல்பிஜி மறு நிரப்புதல் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றங்கள் இருப்பதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்று விளக்கமளித்துள்ளது.

சிலிண்டர் முன்பதிவு குறைந்தபட்ச இடைவெளி 25 நாட்கள்

மேலும் எல்பிஜி மறு நிரப்புதல் முன்பதிவு விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு மறு நிரப்புதல் முன்பதிவுகளுக்கு இடையேயான குறைந்தபட்ச இடைவெளி 25 நாட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in