வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் : அமித் ஷா அதிரடி உத்தரவு!

பயங்கரவாதம், போதைபொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்...
No Safe Haven for Criminals! Amit Shah Calls for Bringing Back Fugitives Hiding Abroad
No Safe Haven for Criminals! Amit Shah Calls for Bringing Back Fugitives Hiding AbroadGoogle
1 min read

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு :

இந்தியாவில் பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை இந்தியாவுக்கு கொண்டு வருவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை:

இந்திய எல்லைக்கு அப்பால் இருந்துகொண்டு குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்களை ஒடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுவதாக அமித் ஷா குறிப்பிட்டார்.

குறிப்பா, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் இந்தியாவில் உள்ள தங்களது கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்து பல்வேறு குற்ற செயல்களையும், எல்லை தாண்டிய கடத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே, இதுபோன்ற குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

PFI அமைப்பு ஒழிக்கப்பட்டது சிறந்த உதாரணம்:

மாநிலங்களை கடந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க, மாநில காவல்துறையினரும் மத்திய விசாரணை அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தினார்.

இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அமித் ஷா பேசினார்.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி லத்தீப் பட் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, உள்ளூர் பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக காஷ்மீர் மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது பாதுகாப்பு துறையில் முக்கியமான மைல்கல் என்றும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும் அமித் ஷா கூறினார்.

=======================