UPI Transaction ID : முகம், கைரேகை மூலம் பணப் பரிமாற்றம் அறிமுகம்

UPI Transaction ID Authentication With Face, Fingerprint : மொபைல் போனை பயன்படுத்தி கைரேகை, முக அங்கீகார அடையாளத்தின் மூலம் யுபிஐ வழியாக பணம் செலுத்தும் வசதி இன்று அறிமுகமாகி இருக்கிறது.
UPI Transaction ID Authentication With Face Fingerprint Biometric Upgrade in Tamil
UPI Transaction ID Authentication With Face Fingerprint Biometric Upgrade in Tamil
1 min read

டிஜிட்டல் பரிவர்த்தனை :

UPI Transaction ID Authentication With Face, Fingerprint: பொருட்களை வாங்குவது மற்றும் சேவைகளை பெறுவதற்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது இதுவரை பின் நம்பர்களை அடையாளமாகக் கொண்டு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வசதியாக, இன்று முதல் புதிய விதிமுறை அமல்படுத்தி இருக்கிறது, தேசிய பணப்பரிமாற்றக் கழகம் (NPCI).

முகம், கைரேகை மூலம் அங்கீகாரம்

அதன்படி, பயனர்கள் தங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை முக அடையாளம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி அங்கீகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு PIN எண்ணை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது பயோமெட்ரிக் முறையிலும் பணம் செலுத்த முடியும். இந்த புதிய வசதி PIN எண்ணை உள்ளிடும் தேவையை நீக்குகிறது. பயோமெட்ரிக் தரவுகள் ஆதார் அமைப்புடன் பாதுகாப்பாக இணைக்கப்படுவதால், பயனர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை.

பரிவர்த்தனை மோசடிகளை தவிர்க்கலாம்

PIN நம்பரைப் பொருத்தவரையில் பகிரப்பட அல்லது திருடப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், கைரேகை அல்லது முக அடையாளம் போன்ற பயோமெட்ரிக் தரவுகளை நகலெடுப்பது சாத்தியமற்றது. எனவே, இவற்றின் அடிப்படையிலான பரிவர்த்தனைகளில் மோசடிகளை செய்வது மிகவும் கடினமானது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க : Digital India: கத்தாரிலும் UPI சேவை: கரன்சி எக்ஸ்சேன்ஜ் தேவையில்லை

வயதானவர்களுக்கு வரப்பிரசாதம்

PIN எண்ணை நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமப்படும் வயதானவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் இந்தப் புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயோமெட்ரிக் தரவுகள் தொலைபேசியில் மட்டுமே குறியாக்கம் செய்யப்பட்ட நிலையில் இருக்கும். வங்கிகளோ அல்லது NPCI-யோ இதைச் சேமிக்கவோ அல்லது அணுகவோ முடியாது. பயனர்கள் இந்த அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம் அல்லது முடக்கி வைக்கலாம்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in