முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
N.S. Raja Subramani appointed as new Chief of  (Armed Forces
N.S. Raja Subramani appointed as new Chief of (Armed Forces google
1 min read

புதிய தளபதி பதவியேற்ப்பு

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி அந்த பதவியில் அமர உள்ளார்.

அனில் சவுகான் : பணி பின்னணி

இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் நிலவும் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஆழமான புரிதலையும் ஒரு சேர பார்தவர் .ஏறக்குறைய 39 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர், லக்னோவில் உள்ள மத்திய ராணுவ கட்டளையின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

புதிதாக பணியமரும் தளபதி

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், வரும் மே 31-ஆம் தேதி முப்படைகளின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக்கொள்கிறார்

மின்னணு் போர்முறையில் நிபுணத்துவம்

தற்போதைய தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதிக்கு பிறகு இவர் பொறுப்பேற்கவுள்ளார். 1987-ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல், ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட போர்க்கப்பல்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவத்தில் இவர் சிறந்து விளங்கியவர்

தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியான இவர் ,தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவர்.

முக்கியத்துவம் பெறும் இந்த அதிகாரிகளின் நியமனம்

லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார். அதேபோல், வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள உயரிய ராணுவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரு அதிகாரிகளின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in