காஷ்மீரில் மீண்டும் எழுச்சிபெற்ற சுற்றுலா : உமர் அப்துல்லா
CM Omar Abdullah on Kashmir Tourism : கொல்கத்தாவில் நடைபெற்ற சுற்றுலா கண்காட்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது : மேற்கு வங்கத்தில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வர வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் காஷ்மீருக்கு வருகிறார்கள். அமர்நாத் யாத்திரையும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இரு வழித்தடங்களிலும் பக்தர்கள் வருகிறார்கள். நான் சில யாத்திரிகர்களிடம் பேசினேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
2025-ம் ஆண்டு எங்களுக்கு எளிதான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்காம் தாக்குதலுக்கு(Pahalgam Attack) முன்பு மற்றும் பின்பு என 2 பகுதிகளாகப் பிரிக்கலாம். பதட்டம் தணிந்து ஜம்மு-காஷ்மீரில் தற்போது சுற்றுலா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது.
இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.
அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க பிலிப்பைன்ஸிலிருந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யாத்திரிகர் ஒருவர், அந்த தாக்குதலுக்குப் பிறகு பயம் இருந்தது. ஆனால் இங்கே எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளன. பாதுகாப்பு உள்ளது. பயப்பட வேண்டாம், அனைவரும் யாத்திரைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
மேலும் படிக்க : அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம் : விரிவான ஏற்பாடுகள்
ஜூலை 3ஆம் தேதி தொடங்கிய 38 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, ஆகஸ்ட் 9ஆம் தேதி, ரக்ஷா பந்தன்(Raksha Bandhan) நாளில் நிறைவு பெறும்.

