தள்ளாடும் இந்தியக் கல்வி : 1 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் : 10 லட்சம் காலிப் பணியிடங்கள் : ஆரம்ப கல்வியே கேள்வி?

இந்தியாவில் ஒரே ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள் இருப்பதால், ஆரம்ப கல்வியே கேள்விக்குறியாகி வருகிறது.
one lakh schools in India operating with a single teacher, the very foundation of primary education
one lakh schools in India operating with a single teacher, the very foundation of primary educationAI generated
1 min read

140 கோடி மக்கள்தொகை

உலக அளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட முதல் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. 140 கோடி மக்கள் என்பது இந்தியாவின் பலம். அதிலும் இளைஞர்களின் எண்ணிக்கை பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.

கேள்விக்குறியான கல்வி

அதேசமயம் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வியின் தரம் உயர்ந்து இருக்கிறதா என்று பார்த்தால், அங்கு தான் பிரச்னையே இருக்கிறது.

ஒரு லட்சம் பள்ளிகள், ஒரே ஒரு ஆசிரியர்

இந்தியாவில் ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு 1 லட்சம் பள்ளிகள் இயங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

33 லட்சம் குழந்தைகள் பாதிப்பு

இதன்காரணமாக சுமார் 33 லட்சம் குழந்தைகளின் ஆரம்ப கல்வி என்பது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் காலிப் பணியிடங்கள்

சுமார் 10 லட்சம் பணியிடங்கள் நாடு முழுவதும் காலியாக இருப்பது இந்தியக் கல்வி அமைப்பில் இருக்கும் நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது.

ஆரம்ப கல்வி தட்டுப்பாடு

ஆரம்பக் கல்வித் தட்டுப்பாட்டில் பெரும்பங்கு பிஹார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ளன. கல்வித் தகுதித் தேர்வில் 4 பேரில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலைமை கல்வித் தரத்தைக் கேள்விக்குறியாக்கி வருகிறது.

இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் 90 சதவீதம் அளவுக்கு ஆரம்ப கல்வி என்பது இளையோருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

தனியார் பள்ளிகள் ஆதிக்கம்

அதேசமயம் தனியார்ப் பள்ளி புற்றீசல்கள் போல பெருகி இருக்கின்றன. ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர் எழுத்துபூர்வமான ஒப்பந்தம் இன்றியே பணிபுரியும் சூழலே இருக்கிறது.

தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் சராசரியாக ரூ.20 ஆயிரம் மாத ஊதியம் பெறுகின்றனர். மறுபுறம், தனியார் பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

தனியார் பள்ளி மோகம் அதிகரிப்பு

நகர்ப்புறங்களில் 45 சதவீத மாணவர்களும், கிராமப்புறங்களில் 33 சதவீத மாணவர்களும் தனியார் படிப்புகளை நாடுகின்றனர்.

கல்விக்காக மாதம் ரூ.10,000

2024ம் ஆண்டில் இந்தியாவின் தனியார் பயிற்சித் துறையின் மதிப்பு சுமார் 650 கோடி டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

சராசரியாக இந்திய நகர்ப்புறக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ10 ஆயிரம் தனியார் பயிற்சிக்குச் செலவிடுகின்றன.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in