ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு
இத்திட்டதின் கீழ், எந்த மாநிலத்தை சேர்ந்தவராகவும் அதற்கான முன்னுரிமை மற்றும் அந்தியோதயா பிரிவு ரேஷன் கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநில ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமையை மற்றும் இதர பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
திட்ட தொடக்கம்
இத்திட்டம் 'மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது' என, தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்த நிலையில் அத்திட்டத்தில் மூலம் அந்த ஆண்டே அக்டோபரில் தமிழகம் இணைந்தது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்
பீஹார், ஜார்க்கண்ட், உபி., ஒடிஷா உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வேலைக்காக தங்கி இருக்கின்றனர் .
இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தை சேர்ந்தவர்கள், பிற மாநிலங்களில் வசிப்பது சற்று குறைவே
அதேசமயம் இந்த திட்டத்தால் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம் பயன்பெற்று வருகின்றனர்.
இத்திட்டம் மூலம் பயன் பெற்றவர்கள்
பிற மாநிலங்கள்
தமிழக ரேஷன் கார்டுதாரர்களில் இம்மாதத்தில் நேற்று வரை 667 பேர், ஜனவரியில் 595; 2025 டிசம்பரில் 667; நவம்பரில் 522; அக்டோபரில் 325 பேர் பிற மாநிலங்களில் பொருட்கள் வாங்கியுள்ளனர்.
தமிழகம்
அதே சமயம் தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களில் இம்மாதத்தில் இதுவரை 71 பேர், ஜனவரியில் 55; 2025 டிசம்பரில் 71; நவம்பரில் 63; அக்டோபரில் 95 பேர் மட்டுமே பொருட்களை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
=======