

2027ல் சட்டமன்ற தேர்தல்
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பொதுமக்களின் எண்ண ஓட்டம்
மாநில அரசியல் தொடர்பாக அரசு நிர்வாகம், தலைமைத்துவம், விருப்பங்கள், மக்கள் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள், சமூகப் பிரச்சினைகள் போன்வற்றில் மக்களோட எண்ணங்களை தெரிந்து கொள்ளும் வகையில் கருத்து கணிப்பானது நடத்தப்பட்டு இருக்கிறது.
75 மாவட்டங்களில் சர்வே
75 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று 30 ஆயிரம் வாக்காளர்களிடம் கேட்கப்பட்டதில், உத்தரப் பிரதேசத்தில் சாதி ரீதியிலான இடஒதுக்கீடு தொடரவேண்டும் என 54.8% பேரும் இட ஒதுக்கீடு வேண்டாம் என 34.4% பேரும் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக கூட்டணி 68.7% ஆதரவு
பாஜக கூட்டணிக்கு 68.7% பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணிக்கு 28.8% பேரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
அடிபட்டுபோன அயோத்தி பிரச்சினை
அயோத்தி கோயில் நன்கொடை மோசடி புகார் தொடர்பாகவும் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதில், இந்த முறைகேடுகளுக்கு அறங்காவலர் குழு காரணம் என 31.2% பேரும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என 20.6% பேரும் கூறியுள்ளனர்.
பொது சிவில் சட்டம் 45% பேர் ஆதரவு
பொது சிவில் சட்டம் மிக முக்கியம் என 45.2% பேரும் ஓரளவு முக்கியம் என 26.5% பேரும் முக்கியமில்லை என 9.2% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சட்டமன்றத் தேர்தலில் GenZ வாக்காளர்களின் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும் என 56% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக அரசு மீது திருப்தி
பாஜக ஆட்சியில் ஊழல் கட்டுப்பாடு மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 42.6% பேரும், பரவாயில்லை என 21% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு மிக திருப்திகரமாக இருப்பதாக 32.7% பேரும் பரவாயில்லை என்று 25.6% பேரும் கூறியுள்ளனர்.
யோகிக்கு 66% ஆதரவு
தகுதி வாய்ந்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு 66.2% பேரின் தேர்வாக தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளார்.
அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக 24.4% பேர் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில் வெறும் 5% பேர் மட்டுமே முன்னாள் முதலமைச்சர் மாயாவதியை தேர்வு செய்துள்ளனர்.
சமாஜ்வாடி, காங்கிரசுக்கு 26% ஆதரவு
உத்தரப்பிரதேசத்தில் அடுத்து யார் ஆட்சி என்ற கேள்விக்கு 66.6% பேர் ஆளும் பாஜக கூட்டணியையே தேர்வு செய்துள்ளனர். இப்பட்டியலில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணிக்கு 26.5% பேரும் பகுஜன் சமாஜுக்கு 5.1% பேரும் மற்றவர்களுக்கு 11% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கு தொடரும் ஆதரவு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான ஆதரவு, பொது மற்றும் ஓபிசி வகுப்பினரிடையே வலுவாக உள்ளது.
பொதுப் பிரிவினரில் 83% பேரும், ஓபிசி வகுப்பினரில் 60.2% பேரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
பட்டியல் பிரிவினர் இடையே ஆதரவு நிலைப்பாடு சிதறிக்கிடக்கும் நிலையில் அவர்களிடமிருந்து பாஜகவுக்கான ஆதரவு 46.9% ஆக மட்டுமே உள்ளது.
=============