நாடாளுமன்றம் 5வது நாளாக ஒத்திவைப்பு : நீட் விவகாரம், மாணவர்களின் போராட்டத்தால் கடும் அமளி...!

டெலியில் தீவிரமடைந்து வரும் மாணவர்களின் போராட்டம் காரணமாக , நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது ஐந்தவாது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Parliament adjourned  fifth consecutive day; intense uproar over the NEET issue  student protests.
Parliament adjourned fifth consecutive day; intense uproar over the NEET issue student protests.ai generated
1 min read

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு கூடிய மழைக்கால கூட்டத்தொடரானது தொடங்கிய நிலையில் அதில் , இறந்த தலைவர்களுக்கு இரங்கலானது தெரிவிக்ககப்பட்டது

எதிர்க்கட்சிகளின் அமளி

அவை கூடிய சில நிமிடங்களிலேயே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும், தொடர் முழக்கமும்

மாநிலங்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பியதுடன், டெல்லியில் நடைபெறும் போராட்டங்களை அரசு ஒடுக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய 4 நாட்களுமே அவையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்றத்தின் இரு அவையும் ஒத்திவைப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைக்கேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் , இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டமானது நடைப்பெற்று வருகிறது , இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுந்த எதிர்பிற்கு பிறகு அவையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தீவிரமடைந்துள்ள போராட்டம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிட் தேர்வு முறைக்கேடுவிற்கு எதிரான போராட்டமானது இந்தியா முழுவதும் தீவிரமடைந்திருக்கும் நிலையில் , இதற்கு தீர்வு எட்டப்படும் என்று பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தார் ,

இவரின் இந்த பேச்சிற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்பானது கிளம்பியிருந்தது. இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் கடும் அமளி காராணமாக அவையானது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வாரம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டதொடர்

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே எதிர்கட்சிகளின் அமலி காரணமாக கூட்டத்தொடரானது ஒத்தி வைக்ககப்பட்டது. தொடர்ந்து வாரம் முழுவதுன் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் அமளி காரணமாக அவையானது ஐந்தாவது நளாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிள்ளது.

========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in