

பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட்
Union Budget 2026 Employees' Pension Scheme (EPS), 1995, is managed by EPFO, providing monthly pensions for retirement (8.33% of wages up to ₹10,000) : பிப்ரவரி 1ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப் போகின்றன என்று எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்து இருக்கிறது.
ஈபிஎஸ் தொழிலாளர்கள் காத்திருப்பு
ஈபிஎஸ் ( EPS )எனப்படும் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரக்கூடிய நபர்கள் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிஎஃப் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் பெயரில் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் சார்பாக பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
மாதாந்திர ஓய்வூதியம்
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு வேலை செய்து அதில் பங்களிப்பு செய்த ஊழியர்கள் பென்சன் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் கணக்கில் பங்களிப்பு செய்யும் தொகையில் ஒரு கணிசமான பணமானது பென்ஷன் திட்டத்திற்கு சென்று விடும்.
இவர்கள் ஓய்வு பெறும் போது இந்த பணத்தை மாதாந்திர ஓய்வூதிய தொகையாக பெறலாம். இதனை ஈபிஎஸ் Employees' Pension Scheme (EPS), 1995 என அழைக்கிறார்கள்.
தற்போது ஓய்வூதியம் ரூ.1,000
தற்போது இந்த திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக 1000 ரூபாய் இருக்கிறது. வாழ்க்கை செலவினங்கள் பல மடங்கு பெருகிவிட்டன. இத்தகைய சூழலில் வெறும் 1000 ரூபாயை வைத்துக் கொண்டு ஒரு ஓய்வூதியதாரரால் குடும்பம் நடத்த முடியாது.
ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை
எனவே, ஈபிஎஸ் பென்ஷன் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை 1000 ரூபாயிலிருந்து 5000 அல்லது 10,000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கையை ஓய்வூதியதாரர்கள் முன்வைத்து வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக 1000 ரூபாய் என்ற ஓய்வூதியத் தொகை மாறாமலேயே இருக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
எனவே, வரக்கூடிய பட்ஜெட்டில் மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை 5000 அல்லது 10,000 ரூபாயாகவும் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவ்வாறு ஓய்வூதிய தொகையை உயர்த்துவது அரசுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும். எனவே பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை பொறுத்து மத்திய அரசு இந்த முடிவினை எடுக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
================