கேரளாவில் பயன்பாட்டிற்கு வந்த "பிங்க் பேருந்து" சேவை : பெண்களின் பாதுகாப்பிற்கு உறுதி..!

கேரளாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கென்ற பிரத்யேக பிங்க் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது
'Pink Bus' service launched in Kerala ensures women's safety.
'Pink Bus' service launched in Kerala ensures women's safety. google
1 min read

பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றுக்கொண்டார் அவருக்கு ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்

பெண்களுக்கு இலவச பேருந்து : முதல் கையெழுத்து

கேரளாவின் முதல்வாரக புதிதாக பங்கேற்றுள்ள வி.டி.சதீசன் தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்திற்கான திட்டதிற்கு முதல் கையெழுத்தை இட்டிருந்தார்

பெண்களுக்கு இலவச பேருந்து :ஜூன் 15 முதல் அமல்

தேர்தலின்போது நாங்கள் ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில் ,அதில் முக்கிய வாக்குறுதிகளாக பெண்களுக்கான இலவச பேருந்து சேவையை ஜூன் 15-ம் முதல் மக்கள் பய்னபாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது

பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து சேவை தொடக்கம்

இலவச பேருந்து சேவை தொடக்கத்தை அடுத்து , கேரளாவில் பெண்களுக்கென்று பிரத்யேக பிங்க் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது . கேரள அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்களுக்கான இந்த பிரத்யேக பிங்க் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மாநில அரசின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் , இந்த பிங்க் பஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது

பெண்களுக்கான பிரத்யேக பிங்க் பேருந்து சேவையை மக்களில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் .அப்போது பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் ,

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த பிங்க் சேவையின் நோக்கம்

இத்திட்டம் குறித்து அம்மாநில போக்குவரத்து துறை கூறும்போது பணிபுரியும் ஒவ்வொரு பெண்களின் பாதுக்காப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

டெக்னோபார்க் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் இரவு 8 மணி மற்றும் 10 மணிக்கு சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும் இந்த திட்டம் விரைவில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

===========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in