

இந்தியா மீது கூடுதல் வரி
Piyush Goyal on India US Trade Deal : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி, பின்னர் கூடுதல் வரி 25 சதவீதம் விதித்தார்.
வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய்
இதனால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி செலுத்த வேண்டிய கட்டாயம் எழுந்தது. இந்தப் பிரச்னை இருநாட்டு நல்லுறவு பாதித்தது. இந்தநிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா முன் வந்தது.
மோடியுடன் டிரம்ப் பேச்சு
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு அதிபர் டிரம்ப் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்.
18 சதவீதமாக வரிக் குறைப்பு
அதன் அடிப்படையில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை இந்தியா வரவேற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள் இந்தியாவுக்கு பாதகமாக இருக்கின்றன என்று குறை கூறுகின்றன.
இந்திய தொழில்களுக்கு பாதுகாப்பு
இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஜ்யசபாவில் உரையாற்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவின் விவசாயம், பால்வளத்துறை முழுமையாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
சுமூகமான பேச்சுவார்த்தை
சுமூகமான வகையில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஓராண்டு காலமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்தியாவின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டு செயல்பட்டது.
இந்திய பொருட்களுக்கு கிராக்கி
வர்த்தக ஒப்பந்தம் மூலம் அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். வரி குறைப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை பயக்கும்” என்று அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்தார்.
================