
பிரதமர் கிசான் நிதி திட்டம் :
PM Kisan 20th Installment Date 2025 : மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. சாகுபடி நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
ஆண்டுக்கு 6,000 நிதியுதவி :
4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வீதம், ஆண்டுக்கு ரூ.6,000/- மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு 19 தவணைகளாக மொத்தம் 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
20 வது தவணையாக நிதியுதவி :
அதன்படி 20 தவணைக்கான தொகை ஆகஸ்டு 2ம் தேதி விடுவிக்கப்படுகிறது(PM Kisan 20th Installment Date 2025). இது குறித்து வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ” நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில், ஆகஸ்ட் 2ம் தேதி இந்தத் தொகை விடுவிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி விடுவிக்கிறார் :
உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ரூ.20,500 கோடி மதிப்புள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 20வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி(PM Modi) விடுவிக்கிறார். மத்திய அரசின் முதன்மை நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் 2019ல் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிதி விடுவிப்பு விவசாயிகளின் அன்றாட தேவைகளுக்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் காங்கிரஸ் : பிரதமர் மோடி சாடல்
=====