”வீடியோ வெளியிட்டு பிரதமர் வாக்குறுதி” : நீட் விவகாரத்தில் கடும் நடவடிக்கை : அமைச்சரவை விவாதம், நாடாளுமன்றத்தில் மசோதா!

நீட் வினாத்தாள் விவாகாரத்தில் அமைச்சரவை இன்று விவாதித்து, மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.
PM Modi assured Cabinet discussed the NEET question paper issue today, bring bill regarding it
PM Modi assured Cabinet discussed the NEET question paper issue today, bring bill regarding it AI generated
1 min read

நாடாளுமன்றத்தில் அமளி

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

நாடாளுமன்றத்திற்கு வெளியே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி உள்ளது.

மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்ற மத்திய அரசின் வாக்குறுதியை ஏற்க எதிர்க்கட்சி எம்பிக்கள், போராட்டக்காரர்கள் தயாராக இல்லை. அமைச்சர் பதவி விலகே முதல் கோரிக்கை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

இந்தநிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,"வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது

நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும். அதனால்தான் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம்.

விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்

இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது.

எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

அமைச்சரவை இன்று விவாதம்

இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என பிரதமர் உறுதியளித்து இருக்கிறார்.

மத்திய அரசு நடவடிக்கை

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனம் வாங்சுக் உண்ணாரவிதம் முடிவு

பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே கடந்த 26 நாட்களாகச் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in