‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ : சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வோம் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு...!

சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடீ அழைப்பு விடுத்து இருக்கிறார்.
PM Modi called national flag hoisted at every home on the occasion of Independence Day
PM Modi called national flag hoisted at every home on the occasion of Independence Day
1 min read

விடுதலை நாள் விழா

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதை கொண்டாடும் விதமாக ஆகஸ்டு 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.

80வது சுதந்திர தின விழா

அந்தவகையில், 80வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி சனிக்கிழமை சிறப்பாக கொண்டாப்பட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்த இருக்கிறார் பிரதமர் மோடி.

12வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைக்க உள்ளார்.

நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு

சுதந்திர தினத்தையொட்டி ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ இயக்கத்தில் மக்கள் உற்சாகமாக பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பெருமை மூவர்ண கொடி

நாடு முழுவதும் வரும் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘நமது மூவர்ண கொடி நமது பெருமை. நாட்டிற்காக எப்போதும் சிறந்ததை செய்ய அது நமக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்க பங்காற்றுவதற்கான நமது கூட்டு உறுதிமொழியை புத்துப்பித்துக் கொள்வோம்’’ என கூறி உள்ளார்.

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா திட்டத்தின் கீழ் கடந்த 2022ம் ஆண்டு ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி’ (ஹர் கர் திரங்கா) இயக்கம் தொடங்கப்பட்டது.

மக்களின் தேசிய உணர்வு

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர் என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்து இருக்கிறார்.

===============

logo
Thamizh Alai
www.thamizhalai.in