

மோடி, புதின், ஜின்பிங் சந்திப்பு
டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டனர். அப்போது மூன்று தலைவர்களும் பல்வேறு சர்வேதச பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தகவல் வெளியானது.
டிரம்ப் முயற்சி தோல்வி
புதின் பயணம் குறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
மூன்று தலைவர்களின் நட்பு
இந்நிலையில், மோடி, ஜி ஜின்பிங் உக்ரைன் போரை நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மாநாட்டின் முதல் நாளில் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் புதின் ஆகிய மூவரும் கைகோர்த்து நின்ற காட்சி, உலக அரங்கில் அவர்களின் நெருக்கமான உறவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டிரம்ப், சமீபத்தில் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அதற்கு முன்னதாக அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
அமைதி முயற்சியில் இந்தியா
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வரும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முக்கியமான பாலமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
புதினை சந்திக்க ஜெலன்ஸ்கி விருப்பம்
டிசம்பர் மாதம் மியாமியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் அதிபர் புதின் பங்கேற்றால், தானும் அதில் கலந்து கொண்டு அவரை நேரில் சந்திக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு நடைபெற்றால், போர் தொடங்கிய பிறகு இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் நேர்முக சந்திப்பாக இது அமையும்.
போரை முடிவுக்கு கொண்டு இந்தியாவும், சீனாவும் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், புதின்-ஜெலன்ஸ்கி சந்திப்பு திருப்பு முனையாக இருக்கும் எனத் தெரிகிறது.
===================