உள்நாட்டு போர்கப்பல்கள் , நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி : ”இந்தியாவின் தொழில்துறைக்கான சான்று என பெருமிதம்”.!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை கொல்கத்தாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
PM Modi dedicates indigenously built warships  nation, expressing pride in testament  India's industrial prowess.
PM Modi dedicates indigenously built warships nation, expressing pride in testament India's industrial prowess. source : pm modi twitter
1 min read

அதிநவீன போர்கப்பல்கள் : நாட்டுக்கு அர்பணித்த மோடி

ஒன்றிய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே ஆகிய 3 அதிநவீன போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுள்ளது.

கொல்கத்தா சியாமபிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடந்த விழாவில் 3 போர் கப்பல்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் மோடி கூறியதாவது

பாதுகாப்புத் துறையில் இந்தியா ஒரு வாங்கும் நாடாக மட்டுமே இருக்க விரும்பவில்லை நாட்டின் ஆயுதப் படைகள் உலகிற்கான ஒரு சந்தையாக மட்டும் இருக்க முடியாது என்றும் ,

நமது திறன்களுக்கான அங்கீகாரம் என்பது நாம் உலகிற்கான சந்தையாக மாறுவதில் இல்லை, மாறாக நமது தன்னம்பிக்கையில்தான் உள்ளதாகவும் பிரதமர் மோடி

வெறும் எண்கள் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலம்

சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர் கப்பலை சேவையில் ஈடுபடுத்தியதன் மூலம் இந்தியா தனது கடல்சார் திறன்களை நிரூபித்திருந்தது

கடந்த சில ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 45 பெரிய கடற்படைத் தளங்கள் கட்டுமானத்தில் உள்ளன. இவை வெறும் எண்கள் மட்டுமல்ல,

இந்தியாவின் தொழில்துறைத் திறனுக்கான சான்று மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான அறிகுறி இது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in