பிரதமர் மோடியின் பிக் அப்டேட் : சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மத்திய அமைச்சர்கள்..!

பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர்களை நேரடியாக சென்றடையும் வகையில், சமூக வலைதள பயன்பாட்டில் மத்திய அமைச்சர்கள் அசத்தி வருகிறார்கள்.
pm modi instructs cabinet minsiters to be active on social media and deleiver the government schemes to social platforms
pm modi instructs cabinet minsiters to be active on social media and deleiver the government schemes to social platformsAi Generated
1 min read

பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற சமீபத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அமைச்சர்களுக்கு சமூக வலைதளங்கள் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக Instagram, YouTube Shorts, Reels போன்ற தளங்களில் அதிக கவனம் செலுத்தி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்குமாறு கூறப்பட்டதாக தெரிகிறது.

இளைஞர்களின் வாக்கு மீது கவனம் :

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் அரசியல் களத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் விவாதங்கள் அதிகரித்துள்ளன

பல்வேறு அரசியல் கருத்துக்கள், பிரச்சாரங்கள் மற்றும் பொதுமக்கள் கருத்துகள் சமூக வலைதளங்கள் வழியாக வேகமாக பரவி வருகின்றன.

இளைஞர்கள் கையில் எதிர்கால அரசியல் :

இதன் காரணமாக, இளைஞர்களால் அரசியல் சூழலில் ஒரு பெரிய மாற்றம் உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வரவிருக்கும் தேர்தல்களிலும் இளைஞர்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அவர்களை நேரடியாக சென்றடையும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் ஆய்வு :

அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களின் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

யார் அதிகமாக பதிவுகள் வெளியிடுகின்றனர், எந்த பதிவுகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது, மக்களிடம் யார் அதிகம் சென்றடைகின்றனர் போன்ற விவரங்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் :

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்களின் தகவல் தேவைகளுக்காக சமூக வலைதளங்களையே நம்பி வருகின்றனர்.

இதனால் அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளை நேரடியாக அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் சமூக வலைதளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

வருகின்ற தேர்தலை கருத்தில் கொண்டு :

வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு இந்த டிஜிட்டல் அணுகுமுறை மேலும் வலுப்பெறலாம் என்றும், மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள பக்கங்களில் இனி அதிகமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் மக்களுடனான நேரடி தொடர்பு பதிவுகளை காண முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in