"நாடாளுமன்றத்தை முடக்கும் நாடகம் வேண்டாம்’ : பிரதமர் மோடி அறிவுரை

PM Narendra Modi on Opposition Parties in Parliament : நாடாளுமன்றத்தை முடக்கும் நாடங்களை விடுத்து எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Prime Minister Narendra Modi asked opposition parties to work constructively instead of trying to block Parliament Winter Session 2025
Prime Minister Narendra Modi asked opposition parties to work constructively instead of trying to block Parliament Winter Session 2025ANI
1 min read

குளிர்கால கூட்டத் தொடர்

PM Narendra Modi on Opposition Parties in Parliament Winter Session 2025 : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. 19ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 10 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளன.

10 மசோதாக்கள் தாக்கல்

அணுசக்தி மசோதா, இந்திய உயர்கல்வி ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்ப்பரேட் சட்டத் திருத்த மசோதா, பத்திர சந்தை குறியீடு மசோதா, மணிப்பூர் ஜிஎஸ்டி திருத்த மசோதா, அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா காப்பீட்டு திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் வியூகம்

SIR பணிகளை தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக பிரச்சினை எழுப்ப முடிவு செய்துள்ளன. பிகார் தேர்தலில் கிடைத்திருக்கும் அடி, இண்டியா கூட்டணியை பதம் பார்த்து இருக்கிறது.

தேர்தலில் பெண்களின் பங்களிப்பு

இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ” இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வலுப்பெற்று வருவதற்கான அடையாளம் தான் பிகார் தேர்தல் வெற்றி. அதில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது.

நாடாளுமன்றத்தில் நாடகம் வேண்டாம்

பிகார் தேர்தல் தோல்வி தந்த அழுத்தத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் மீண்டு வர வேண்டும். வெற்றியின் ஆணவத்தையும், தோல்வியின் விரக்தியையும் வெளிப்படுத்தும் இடமல்ல நாடாளுமன்றம்.

எனவே, எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கி நாடகங்கள் நடத்துவதைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்காக நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்.

நாட்டின் வளர்ச்சி முக்கியம்

நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது. நமது பொருளாதார வளர்ச்சி புதிய நம்பிக்கை தந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழப்பு மிகவும் அவசியம்.

கூட்டத்தொடரில், இளம் எம்.பி.க்கள், முதன்முறை எம்.பி.க்கள் அவையில் அதிகமாக பேச வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in