184 எம்பிக்களுக்கு புதிய வீடுகள் : திறந்து வைத்தார் பிரதமர் மோடி

PM Narendra Modi Inaugurates Flats For MPs in Delhi : டெல்லியில் எம்பிக்களுக்காக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
PM Narendra Modi Inaugurates Flats For MPs in Delhi
PM Narendra Modi Inaugurates Flats For MPs in Delhi
1 min read

டெல்லியில் எம்பிக்கள் வீடுகள் :

PM Narendra Modi Inaugurates Flats For MPs in Delhi : இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் சேர்த்து சுமார் 800 எம்பிக்கள் உள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வீடு ஒதுக்கப்படுகிறது. எம்பியாக்க இருக்கும் வரை அங்கே தங்கி இருக்கலாம். பின்னர் காலி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள வீடுகளில் போதிய இடவசதி இல்லை என எம்பிக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

எம்பிக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு :

இதையடுத்து, அவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பை மத்திய அரசு(Central Govt MPs Apartment) கட்டி இருக்கிறது. டெல்லியின் பாபா கரக் சிங் மார்க்கில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் 184 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் 5,000 சதுரஅடி பரப்பளவை கொண்டது.

நவீன வசதிகளுடன் குடியிருப்புகள் :

ஒவ்வொரு வீட்டிலும் 5 படுக்கை அறைகள் உள்ளன. டைனிங் அறை, விருந்தினர் அறை, விருந்தினர் தங்கும் அறை என குடியிருப்புகள்(MPs House Facility) விசாலமாக கட்டப்பட்டு இருக்கின்றன. மேலும் எம்பிக்கள், தங்கள் வீட்டிலேயே அலுவலக அறையை அமைத்துக் கொள்ளவும், தனியிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 500 வாகனங்களை நிறுத்தவும் இட வசதி இருக்கிறது.

கூடுதல் வசதிகளுடன் எம்பிக்கள் குடியிருப்பு :

அலுவலகங்கள், ஊழியர்கள் தங்குமிடம், சமூக மையம் ஆகியவற்றுக்கான பிரத்யேக இடங்களும் அமைந்துள்ளன. மேலும் பூகம்பத்தை தாங்கும் விதமாக குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

நவீன கட்டிட வடிவமைப்பு :

இந்த குடியிருப்பில் அலுவலகங்கள், ஊழியர்கள் தங்குமிடம், சமூக மையம் ஆகியவற்றுக்கான பிரத்யேக இடங்களும் அமைந்துள்ளன. மேலும் இந்த வளாகத்துக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களும் நவீன கட்டிட வடிவமைப்பு(MPs Apartment Complex) விதிமுறைகளின்படி, பூகம்பத்தை தாங்கும் விதமாக கட்டப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி திறந்து வைத்தார் :

இந்த குடியிருப்பு வளாகத்தை பிரதமர் மோடி(PM Modi) இன்று திறந்து வைக்கிறார். சிந்தூர் மரக்கன்று ஒன்றையும் அவர் நட்டார். நான்கு தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோஷி, ஹூக்ளி ஆறுகளின் பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கின்றன.

மேலும் படிக்க : ’Operaion Sindoor-பாகிஸ்தானை மண்டியிட வைத்தோம்’ : மோடி பெருமிதம்

விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த குடியிருப்புகளில் 180 எம்பிக்கள் வசிப்பார்கள் என்றார். வாடகை கட்டிடங்கள்(MP House Rent) மூலம் அரசுக்கு இதுவரை ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் செலவானதாகவும், இப்போது அந்த இழப்பு குறைந்து விட்டதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in