Independence Day: தீபாவளிக்கு பெரிய பரிசு : பிரதமர் மோடி அறிவிப்பு

PM Modi Independence Day 2025 Speech : நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது, என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கிறார்.
PM Modi Independence Day 2025 Speech
PM Modi Independence Day 2025 Speech in TamilANI
1 min read

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம் :

PM Modi Independence Day 2025 Speech : டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். ”

இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்படும்.

புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 3.5 கோடி இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். புதிதாக தனியார் துறையில் பணியில் இணையும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

உலக அளவில் விவசாயிகள் சாதனை :

உற்பத்தியில் உலக அளவில் விவசாயிகள் சாதனை புரிந்து வருகின்றனர். மீனவர்கள், விவசாயிகள் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை. பருப்பு உற்பத்தியில் முதல் இடம். அரிசி, கோதுமை உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இப்போது அரசும், திட்டங்களும் மக்களின் வீடு தேடி செல்கின்றன. பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்தியாவில் 25 கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டு உள்ளது.

மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி :

மொழிகள் குறித்து பெருமை கொள்ள வேண்டும். மொழி வளர்ச்சியே அறிவு வளர்ச்சி. தேச சேவையில் 100 ஆண்டுகளை ஆர்எஸ்எஸ் நிறைவு செய்துள்ளது. தேசத்திற்கான உயிர் தியாகங்களை ஆர்எஸ்எஸ் செய்துள்ளது. ககன்யான் திட்டத்தில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நமது நாட்டின் தலைவிதியை மாற்ற நாம் ஒன்றிணைய வேண்டும்.

மேலும் படிக்க : அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது: பாகிஸ்தானுக்கு பதில்

தீபாவளி பரிசு காத்திருக்கிறது :

நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சிறு, குறு நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும்.

ஜிஎஸ்டி குறைப்பால் ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் நிதி நிலைமை மேம்படும்” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in