இரண்டு நாள் அரசுமுறை பயணம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் மோடி !
Modi becomes the first Indian Prime Minister to address the Israeli parliament!
பிரதமரின் அரசுமுறை பயணம்
PM Narendra Modi Israel Visit Will Speech in Parliament : ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
புதிய இலக்குகளை அமைக்கும்
தனது அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை மேலும் பலப்படுத்தும், மூலோபாய கூட்டாண்மைக்கான புதிய இலக்குகளை அமைக்கும், நெகிழ்ச்சியான, புதுமையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட பார்வையை மேம்படுத்தும் என்று நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நான் இன்றும் நாளையும் இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறேன். நமது நாடுகள் வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கூட்டுறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.
வரலாற்று சிறப்பு
மேலும், இது உண்மையில் இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க வருகை. இது நமது நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நட்புறவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை
கடந்த சில ஆண்டுகளில் உறவுகள் கணிசமாக வலுப்பெற்றுள்ளன. பிரதமர் நெதன்யாகுவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன், அதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்போம்.
இஸ்ரேல் ஜனாதிபதி சந்திப்பு
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கையும் சந்திப்பேன். இந்தியா-இஸ்ரேல் நட்பை வலுப்படுத்துவதில் பெரும் பங்களிப்பைச் செய்துவரும் இந்திய புலம்பெயர்ந்தவர்களுடனும் நான் உரையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாடாலுமன்றத்தில் முதல் இந்திய பிரதமர் உரை
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதன் மூலம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

