’அறிவுசார் வலிமையே இந்தியாவின் சக்தி’: பிரதமர் மோடி திட்டவட்டம்

PM Modi on Karpoori Thakur Jan Nayak Youth Scheme : இந்தியா அறிவும், திறமையும் கொண்ட நாடு. இந்த வலிமையே நமது மிகப்பெரிய சக்தி'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"India is a country of knowledge and talent. This strength is our greatest strength," Prime Minister Modi
PM Modi on Karpoori Thakur Jan Nayak Youth Scheme in Bihar
2 min read

பீகார் சட்டமன்ற தேர்தல் :

PM Modi on Karpoori Thakur Jan Nayak Youth Scheme : பீகார் சட்டப் பேரவை தேர்தலுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இம்மாத இறுதி மற்றும் அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.

பீகார் மக்களுக்கு மோடி அறிவுரை :

இந்தநிலையில், பிகார் மாநிலத்துக்கு ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டங்களை டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ” கர்ப்பூரி தாக்கூருக்கு வழங்கப்பட்ட மிக உயரிய விருதை திருட சிலர் முயற்சிப்பதாக, ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். அவர்களிடம் பீஹார் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.

அறிவுசார் திறன் வாய்ந்த இந்தியா

இந்தியா அறிவும், திறமையும் கொண்ட நாடு. இந்த வலிமையே நமது மிகப்பெரிய சக்தி. உலகில் அதிக இளைஞர்களை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. பிகார் அதிக இளைஞர் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். எனவே, பீஹாரின் இளைஞர்களின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, ​​நாட்டின் பலமும் அதிகரிக்கிறது. பீஹார் இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் வலுப்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது.

பிகார் இளைஞர்கள் மகிழ்ச்சி

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களால் பிகார் மாநில இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஒருவர் என்னிடம் கூறினார். பட்டதாரிகளுக்கு மாத உதவி தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. பிகாரில் இருந்து பெருமளவில் மக்கள் இடம்பெயர்வதற்கு முந்தைய ஆர்ஜேடி கட்சி(RJD Rule in Bihar) ஆட்சியின் போது கல்வியில் மோசமான நிலை முக்கிய காரணம்.

பிகார் முன்னேற்றம் - நிதிஷ் காரணம் :

நிலைமையை மேம்படுத்தி மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் நிதிஷ் குமார் தலைமையிலான தேஜ கூட்டணி அரசு கொண்டு வந்தது. பிகார் அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக புதிய தீர்மானங்களை எடுத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெறும் மக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம். பிகாரை முதன்மை மாநிலமாக்க அனைத்து முயற்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னெடுக்கும்.” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

மேலும் படிக்க : Bihar Election: வெள்ளிக்கிழமை அட்டவணை: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு!

நிதிஷ் குமார் பெருமிதம்

பிகாரில் 5 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து இருக்கிறார். ''இந்த நிதியுதவி இளைஞர்கள் தங்களுக்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளவும் உதவும்'' என முதல்வர் நிதிஷ் குமார் பெருமிதம் தெரிவித்தார்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in