
இந்திய ரயில்வே வரலாற்று சாதனை :
PM Modi Launch Mizoram's First Railway Line : 172 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது இந்திய ரயில்வே, இதன் வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்று எட்டப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். இயற்கை முழு அழகும் கொட்டிக் கிடக்கும் இந்த மாநிலம், வெளிமாநில போக்குவரத்துக்கு ந்ம்பி இருப்பது விமான பயணம் மட்டுமே. ஏன் என்றால் இருப்பு பாதை என்ற ஒன்றே இந்த மாநிலத்தில் கிடையாது. உள்ளூர் போக்குவரத்துக்கு ஆபத்தான மலைப்பாதைகள் மட்டுமே வழி. வர்த்தகம் மேற்கொள்ள, கல்வி கற்க வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், விமானத்தில் மட்டுமே பயணிக்க முடியும்.
ரயில் போக்குவரத்து - எதிர்பார்ப்பு நிறைவேற்றம் :
தங்களுக்கும் பொது போக்குவரத்துக்காக ரயில் பாதை வராதா? என்ற ஏக்கம் மிசோரம் மக்களிடையே 75 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. அவர்களின் கனவை நனவாக்கும் வகையில், சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக மிசோரமில் முதல் ரயில் பாதையை அமைத்து சாதனை படைத்து இருக்கிறது இந்திய ரயில்வே. சவாலான இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். இதற்கான செலவு மட்டும்
ரூ.8,070 கோடியில் இருப்புபாதை திட்டம் :
மிசோரமில் ரூ.8,070 கோடி மதிப்பில் 51 கிமீ நீளத்திற்கு பைராபி-சாய்ராங் ரயில் பாதை(Bairabi - Sairang Railway Project Update) அமைக்கப்பட்டு இருக்கிறது. தூரம் 51 கிலோ மீட்டர் என்றாலும், அனைத்தும் மலைபாதைகள் தான். சவால்களுக்கு பஞ்சமே இல்லை. 45 சுரங்க பாதைகள், 55 மேம்பாலங்கள், 88 சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி :
மிசோரம் மக்களின் நெடுங்கால விருப்பத்தை நிறைவேற்றி இருக்கும் மத்திய அரசு, இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்தை இன்று தொடங்கியது(Mizoram Train Service). பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
மேலும் படிக்க : Mizoram: 75 ஆண்டு கனவு நிறைவேறியது: முதல்முறையாக ரயில்பாதை அமைப்பு
ரயில்வே வரைபடத்தில் மிசோரம் :
விழாவில் உரையாற்றிய அவர், “இந்திய ரயில்வே வரைபடத்தில் இனி மிசோரமும் இடம் பெறும் என்று தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்த பிரதமர், தொடங்கி வைக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். மிசோரம் மக்களுக்கு ரயில் போக்குவரத்தை(Mizoram First Rail Transport) அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைவதாகவும், கடினமான இந்தப் பணியை திறம்பட நிறைவேற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
=============