
டிரம்ப் வரிவிதிப்பு
PM Modi on ASEAN Summit 2025 : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இதனால் நடுத்தர பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிலைமை குறித்து கலந்து ஆலோசிக்கும் வகையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Diwali : 6 லட்சம் கோடிக்கு உள்ளூர் பொருட்கள் : இந்தியர்கள் சாதனை
மலேசியா பிரதமரை தொடர்பு கொண்ட நரேந்திர மோடி
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அக் 26ம் தேதி முதல் அக் 28ம் தேதி(ASEAN Summit 2025 Date) வரை ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த மாநாடுகள் நடக்கின்றன. இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் இன்று ஆசியான் உச்சிமாநாடு தொடர்பாக பிரதமர் மோடி மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ''எனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலை பேசியில் பேசினேன்.
பல நாடுகள் பங்கேற்பு
மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்துக்கும், உச்சிமாநாடு வெற்றி பெறவும் வாழ்த்தினேன். ஆசியான் கூட்டமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பல நாடுகளின் தலைவர்களை மலேசியா அழைத்துள்ளது. அதிபர் டிரம்ப் அக்டோபர் 26ம் தேதி கோலாலம்பூருக்கு இரண்டு நாள் பயணமாக பயணம் செய்ய உள்ளார். ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 10 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ளன.
தீர்வு
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றம் நீடித்து வருவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உச்சி மாநாட்டில், வர்த்தக வரி நீக்கப்பட்டு, இந்தியா மற்றும் அமெரிக்கா முந்தைய பொருளாதார முறை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்லதொரு தீர்மானம் இந்த மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டு, பொருளாதார சூழல் இயல்பு நிலைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
=====