
விஜயதசமி திருவிழா :
PM Modi Wishes Vijayadashami 2025 : தமிழகம் மற்றும் இந்தியாவில் கொண்டாடப்படும் மாபெரும் திருவிழாக்களில் தீபாவளி எப்படியோ அதைப்போல் அதை ஒட்டிவரும் ஆயுத பூஜை(Ayudha Puja) மற்றும் விஜயதசமி விழாக்கள் பிரசித்தியாக கொண்டாடப்படும். அதுவும் தமிழகத்தில் பூஜை, பண்பாடு, ஐதீகம் என்று மற்றவர்கள் அசந்து போகும் அளவிற்கு நடக்கும். இந்நிலையில், விஜயதசமி கொண்டாடபடும் நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் தங்களது தங்களது வாழ்த்துகளை நேரிலும் சமூக வலைதளங்களிலும் பரிமாரி வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து :
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நன்மை மற்றும் உண்மையின் வெற்றியை விஜயதசமி குறிப்பதாகவும்(PM Modi Wishes Vijayadashami 2025) தைரியம், ஞானம் மற்றும் பக்தியின் பாதையில் இந்த மங்களகரமான சந்தர்ப்பம், அனைவரையும் தொடர ஊக்குவிக்கட்டும் என்று குறிப்பிட்டு விஜயதசமி வாழ்த்தை இந்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
அமித்ஷா வாழ்த்து :
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில்(Amit Shah Wishes Vijayadashami 2025), நீதியின் வெற்றியை கொண்டாடும் மாபெரும் விழா விஜயதசமி என்றும், அனைவரின் நல்வாழ்விற்காக ஸ்ரீ ராமரைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் வாழ்த்து :
இதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்(Rajnath Singh Wishes Vijayadashami 2025) என்றும் உண்மை, நீதி, நன்மை எப்போதும் வெல்லும் என்பதை இந்தப் பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Vijayadashami 2025 : 258 ஆண்டாக கலைக்காமல் வழிபாடு : துர்க்கை சிலை
எல்.முருகன் வாழ்த்து :
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட பதிவில், அதர்மம் செய்து வந்த மகிசாசூரனை வீழ்த்தி, அன்னை துர்க்கை நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டிய இந்த நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்பார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகள்(L Murugan Wishes Vijayadashami 2025) எனக் எனவும், தீய எண்ணங்களுக்கு இரையாகாமல், கல்வி, செல்வம், வீரம் மற்றும் வளமுடன் வாழ எல்லாம் வல்ல தெய்வங்களிடம் வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.