அரசியல் சின்னங்களுக்கு பின்னால் இருக்க கூடிய வரலாறு குறித்த தகவல் இதோ!

Political Party Symbols History in Tamil : தேர்தலில் போட்டியிடும் தனித்த ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு பின்னால் இருக்க கூடிய சின்னம் குறித்த வரலாற தகவல்களின் விவரம்
Political Party Symbols History in Tamil : information about the possible histories and stories behind political symbols
Political Party Symbols History in Tamil : information about the possible histories and stories behind political symbolsgoogle
1 min read

தேர்தலும் சின்னமும்

Political Party Symbols History in Tamil : 2026 தேர்தலுக்கான வேலைப்பாடுகள் மிக தீவிரமாக நடந்து வருகிற சூழலில் ,அரசியல் கட்சிகளின் சின்னமும் இந்த செயல்பாடுகளில் முக்கிய கவனம் பெறுகிறது. அந்த வகையில் ஒவ்வெரு தனித்த கட்சிகளுக்கும் அவர்களின் சின்னம் முன்னிலை வகிக்கிறது .

தமிழ்நாட்டில் பிரதனமான கட்சிகளாக ‘உதய சூரியன்’, ‘கை’, ‘அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்’, ‘தாமரை’, ‘இரட்டை இலை போன்ற அரசியல் செயல்பாடுகளில் முன்னிலை வகிக்கிறது

சுயேச்சைசின்னம்- உதயசூரியன்.

1957 தேர்தலில் தேர்தல் ஆணையம் வழங்கிய ‘சுயேச்சை சின்னங்கள்’ பட்டியலில் இருந்து உதயசூரியனை முதன் முதலில் அறிஞர் அண்ணா தான் தேர்ந்தெடுத்தார்.

‘இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் சூரியன், தமிழகத்தின் அறியாமையை நீக்கும் அடையாளமாக இருக்கும்’ என்று அவர் கருதினார். அந்தத் தேர்தலில் திமுக 15 இடங்களில் வெற்றி பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்று, இந்தச் சின்னத்தை திமுக நிரந்தரமாக்கியது.

கை’ சின்னம் கிடைத்த வரலாறு

1978ல் கட்சி பிளவுற்றபோது, தேர்தல் ஆணையம் மூன்று சின்னங்களைக் காங்கிரஸ்க்கு ஒதிக்கீடு செய்தது

அதில் ‘யானை’, ‘மிதிவண்டி’ மற்றும் கை சின்னம் இருந்தன. ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரின் ஆலோசனையின் பேரில் இந்திரா காந்தி கை சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பது குறிபிடத்தக்கது

கை’ சின்னத்தை 1952-லேயே ‘ஃபார்வர்டு பிளாக்’ கட்சி பயன்படுத்தியது. பிறகு காலியாக இருந்த அந்தச் சின்னம் காங்கிரஸின் நிரந்தர அடையாளமானது.

இரட்டை இலை சின்னம் எவ்வாறு கிடைத்தது

1972ல் எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக இல்லை மாறாக 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டவர்க்ளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய 16 சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து ‘இரட்டை இலை’ சின்னத்தைத் தேர்வு செய்தார்.

அந்தத் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்று, தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்தது. அதன்படியே இரட்டை இலை சின்னமா அரசியலில் தற்போது ஒரு திருப்புமுனை சின்னமாக மாறியது .

டிடிவி தினகரன் மற்றும் சசிகலா சில அரசியில் பிரச்னைகளில் சின்னம் சில காலம் முடக்கி வைக்கப்பட்டிருந்ததும் ,பின்னர் எடப்பாடி தலைமையில் இன்று இச்சின்னம் நிலைத்து நிற்கின்றது

பிஜேபின் தாமரை சின்னம்

பாஜவின் முன்னோடியான ஜனசங்கம் முதலில் ‘தீபம்’ விளக்கு சின்னத்தையே நெருக்கடி நிலைக்குப் பிறகு பல கட்சிகள் இணைந்து ஜனதா கட்சியாக மாறியபோது, ‘ஏர் பிடி உழவன்’ சின்னம் வந்தது.

இறுதியாக 1980-ல் பாரதிய ஜனதா கட்சி உருவானபோது, அது தனது அடையாளமாக தாமரை சின்னத்தைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in