
பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு :
Diwali 2025 Gifts Of 5 Items in Pondicherry Ration Shop : தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் விழாவாகும். வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி(CM Rangasamy) தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
5 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு :
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக 5 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு(5 Essential Items As Diwali Gift) ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் 5 பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
அதாவது, கௌரவ அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி தொகுப்பில் பின்வரும் பொருட்கள் (Diwali Gift Items List 2025) :
1. சர்க்கரை – 2 கிலோ
2. எண்ணெய் – 2 கிலோ
3. கடலைபருப்பு – 1 கிலோ
4. ரவை – 1/2 கிலோ
5. மைதா – 1/2 கிலோ
தீபாவளியை கொண்டாட சிறப்பு பரிசு :
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், இந்தத் தொகுப்பு அனைத்து தகுதியான குடும்பங்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்படும்(Puducherry Govt Diwali Gifts) என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது பண்டிகைக் காலத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3.45 குடும்பங்களுக்கு கிடைக்கும் :
புதுச்சேரியில் 3.45 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும்(Ration Card Holders in Pondicherry). இதன் மூலம் அரசுக்கு 19 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். புதுச்சேரியில் ஏற்கனவே, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோவும், சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க : ஆயுத பூஜை, தீபாவளிக்கு “ சிறப்பு ரயில்கள்” : முன்பதிவு தொடக்கம்
தேர்தல் வருவதால் தீபாவளி தொகுப்பு :
வழக்கமாக, தீபாவளி பண்டிகையின்(Diwali Festival 2025) போது சர்க்கரை மட்டுமே வழங்கப்படும். இந்தாண்டு அப்படி இல்லை. சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் மக்களை கவரும் வகையில் சர்க்கரையுடன் மளிகை பொருட்களையும் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
======