
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அரசியல் கட்சிகளை விமர்சித்து,கேள்வி எழுப்பி வரும் அவர், ராகுல் காந்தியை கடுமையாக தாக்கி பேசினார். பீகாருக்கு வருவதும், போவதுமாக இருக்கும் அவர், எதாவது ஒரு கிராமத்தில் ஒரு இரவு தங்க முடியுமா?. டெல்லியில் அமர்ந்து கொண்டு பீகாரை பார்த்து ராகுல் சிரிக்கிறார்.
பீகார் மக்கள் வேலை செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்று கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ராகுலும், ரேவந்த் ரெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பீகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு முன்பு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும், எங்கள் மக்கள் வேலை செய்ய பிறந்தவர்கள் என்றால், நீங்கள் எதற்காக இங்கு வருகிறீர்கள், என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.
===