சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு
Premium Petrol Price Increase Today : தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா போரால் இரு தரப்புக்கும் இடையேயான போர் 21-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானின் முக்கிய எண்ணெய் வயலை இஸ்ரேல் தாக்கியதால், கத்தாரின் மிகப் பெரிய எண்ணெய் வயலை ஈரான் தாக்கியது.
மேலும் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளதால் உலகளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் உலக நாடுகள் பலவற்றிலும் எரிபொருள் தட்டுப்பாடானது ஏற்பட்டுள்ளது.
பிரீமியம் பெட்ரோல் என்பது என்ன
வாகனத்தின் என்ஜினின் செயல் திறன் சிறப்பாக இருப்பதற்காகவும், மேம்பட்ட மைலேஜுக்காகவும் பயன்படுத்தப்படுவது பெட்ரோல் பிரீமியம் பெட்ரோல் என ஆழைக்கப்டுகிறது
குறிப்பாக, சொகுசு வாகனங்கள், ஸ்போர்ட்ஸ் வாகனங்கள், உயர் செயல்திறன் கொண்ட கார்கள் ஆகியவற்றில் இத்தகைய எரிபொருள் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
ஆக்டேன் எரிபொருள் அல்லது பவர் பெட்ரோல் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின் இந்த விலை உயர்வு, வசதி படைத்த வாடிக்கையாளர்களையே பெரிதளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு
இந்த கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டால் பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருப்பதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேநேரத்தில், விலை உயர்வுக்கான காரணத்தை அது தெரிவிக்கவில்லை. எனினும், சாதாரண பெட்ரோலின் விலையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை என தெரிவித்துள்ளது
அதிகாரபூர்வ அறிவிப்பை நம்புங்கள் :ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த இடையூறும் தற்போது இல்லை என்று தெரிவித்திருக்கும் நிறுவனம் , கூடுதல் சரக்குகள் ஏற்கெனவே வந்து கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் இந்தியாவின் விநியோக நிலை மேலும் வலுப்படும். வதந்திகளை நம்பாதீர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது