Droupadi Murmu: நீர்மூழ்கிக் கப்பலில் பயணம்: ஜனாதிபதி முர்மு சாதனை

President Droupadi Murmu Submarine Sortie in INS Vaghsheer : நீர்​மூழ்​கிக் கப்​பலில் பயணம் செய்து குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு சாதனை படைத்​து இருக்கிறார்.
President Droupadi Murmu Submarine Sortie in INS Vaghsheer At Karnataka Naval Base set Record News in Tamil
President Droupadi Murmu Submarine Sortie in INS Vaghsheer At Karnataka Naval Base set Record News in TamilGoogle
1 min read

நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி முர்மு

President Droupadi Murmu Submarine Sortie in INS Vaghsheer At Karnataka Naval Base : குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு கோவா, கர்​நாட​கா, ஜார்க்​கண்ட் ஆகிய 3 மாநிலங்​களில் 4 நாட்​கள் அரசு முறை பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இந்​நிலை​யில், கர்​நாடக மாநிலம் கார்​வார் துறை​முகத்​தில் இருந்து இந்​திய கடற்​படைக்​குச் சொந்​த​மான நீர்​மூழ்கி கப்​பல் மூலம் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பயணம் செய்தார்.

ஐஎன்​எஸ் வாக்​‌ஷீர்

கல்​ வாரி வகையை சேர்ந்த நீர்​மூழ்கி கப்​பலான ஐஎன்​எஸ் வாக்​‌ஷீரில்(INS Vaghsheer) இந்​தப் பயணத்தை குடியரசுத் தலை​வர் மேற்​கொண்​டார். அவருடன் கடற்​படை தளபதி அட்​மிரல் தினேஷ் கே.​திரி​பாதி உள்​ளிட்ட அதி​காரி​கள் பயணம் செய்​தனர். முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலா​முக்​குப் பிறகு நீர்​மூழ்​கி​யில் பயணம் செய்த 2-வது குடியரசுத் தலை​வர் திரௌவுபதி முர்மு(Droupadi Murmu) என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

போர் விமானத்தில் முர்மு

கடந்த அக்​டோபர் மாதம், நாட்​டின் மேம்​படுத்​தப்​பட்ட பன்​முகத் தாக்​குதல் திறன் கொண்ட போர் விமான​மான ரஃபேலில், குடியரசுத் தலை​வர் திரௌபதி முர்மு பறந்​தது குறிப்​பிடத்தக்​கது.

கலாமிற்கு அடுத்து முர்மு

கடந்த 2006-ம் ஆண்டு அப்​போதைய குடியரசுத் தலை​வர் டாக்​டர் ஏ.பி.ஜே.அப்​துல் கலாம்(APJ Abdul Kalam Submarine) முதல்முறையாக நீர்​மூழ்​கிக் கப்​பலில் பயணம் செய்​திருந்​தார். சுமார் 19 ஆண்​டு​களுக்​குப் பிறகு தற்​போது திரௌபதி முர்​மு, நீர்மூழ்​கிக் கப்​பல் பயணத்தை மேற்​கொண்டார்.

இந்தியாவின் பாது​காப்​பு துறை​யின் உள்​கட்​டமைப்பு மற்​றும் தன்​னிறைவு மீதான நம்​பிக்​கையை உலகுக்கு பறை​சாற்​று​வ​தாக குடியரசு தலைவரின் பயணம் அமைந்​துள்​ளது என்று இந்​திய கடற்​படை வெளி​யிட்​டுள்​ள செய்திக்​குறிப்​பில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in