மணிப்பூர், ஜனாதிபதி ஆட்சி முடிவு: பாஜக அரசு, துணை முதல்வராக பெண்

Manipur Rule : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், அங்கு பாஜக சார்பில் முதல்வராக கேம்சந்த் சிங்கும், குக்கி இன பெண் தலைவரான நெம்சா கிப்​கென் துணை முதல்வராகவும் பதவியேற்கின்றனர்.
President's rule ends in Manipur, Khemchand Singh of the BJP will take oath as the Chief Minister and Nemsa Kipken, a Kuki ethnic woman leader, will be sworn in as the Deputy Chief Minister.
President's rule ends in Manipur, Khemchand Singh of the BJP will take oath as the Chief Minister and Nemsa Kipken, a Kuki ethnic woman leader, will be sworn in as the Deputy Chief Minister. Source : Google
1 min read

மணிப்பூரில் மோதல், பாஜக ஆட்சி

Yumnam Khemchand Singh set to be next Manipur CM; State to get first woman Kuki-Zo Deputy CM : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே தொடங்கிய இன வன்முறை, கலவரமாக வெடித்தது.

இந்த வன்முறையின் போது குறைந்தது 260 பேர் உயிரிழந்தனர். இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக முதல்வரான பிரேன்சிங் பதவியை ராஜினாமா செய்தார்.

மணிப்பூர் - ஜனாதிபதி ஆட்சி

இதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. பாஜக அரசு அமைக்க வேண்டும் என்று அக் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சி வரும் 13ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.

புதிய முதல்வர் கேம்சந்த் சிங்

இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் புதிய முதல்வராக ஒய். கேம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து மணிப்பூர் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திலும் கேம்சந்த் சிங் பெயர் அங்கீகரிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது

அதையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சரவை, குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யும். அதன்பிறகு, மணிப்பூர் ஆளுநர் அஜய்பல்லாவை சந்தித்து கேம்சந்த் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.

விரைவில் புதிய அரசு

விரைவில் அவர் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

குக்கி பெண்ணுக்கு துணை முதல்வர் பதவி

புதிய அரசாங்கத்தில், ​​குக்கி இனத்தைச் சேர்ந்த பெண் தலைவரான நெம்சா கிப்கென் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மணிப்பூர் பாஜகவின் பலம்

60 உறுப்பினர்கள் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு 2022ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் பா.ஜவில் இணைந்ததால் பாஜக பலம் 37 ஆக உயர்ந்துள்ளது.

புதிய முதல்வர் கேம்சந்த் சிங்

மணிப்பூர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள யும்னம் கேம்சந்த் சிங் 62 வயதானவர். மெய்பீஸ் இனத்தைச் சேர்ந்தவர். தற்காப்புக் கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர். சிங்ஜமேய் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

2017 முதல் 2022 வரை மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகராகப் பணியாற்றினார். முதல்வர் பிரேன்சிங் ஆட்சியில் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றினார்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in