
தினமும் உச்சம் தொடும் தங்கம்
Gold Rate Today : சர்வதேச சூழ்நிலைகள், அமெரிக்காவின் வரி விதிப்பு, உலக நாடுகள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 11,825 ரூபாய்க்கும், சவரன் 94,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 11,860 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, 94,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
95,000ஐ கடந்த தங்கம்
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.95,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,900க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
10 நாட்களில் தங்கம் விலை நிலவரத்தை பார்க்கலாம்
அக்டோபர் 16, 2025 ₹12,982
அக்டோபர் 15, 2025 ₹12,938
அக்டோபர் 14, 2025 ₹12,900
அக்டோபர் 13, 2025 ₹12,633
அக்டோபர் 12, 2025 ₹12,546
அக்டோபர் 11, 2025 ₹12,546
அக்டோபர் 10, 2025 ₹12,371
அக்டோபர் 09, 2025 ₹12,464
அக்டோபர் 08, 2025 ₹12,420
அக்டோபர் 07, 2025 ₹12,218
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்திற்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து இருக்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000 க்கு விற்கப்பட்டு வருகிறது.
=========