

போரால், எரிபொருள் தட்டுப்பாடு
prices of petrol and diesel increased third time, there is a situation the prices of essential commodities are increasing : ஈரான் போர் காரணமாக, உலக நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கு. பல நாடுகளில் இவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கின்றன.
ஈரான் கட்டுப்பாட்டில் ஹோர்முஸ்
தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டு இருந்தாலும், ஹோர்மூஸ் நீரிணைய ஈரான் தனது கட்டுப்பாட்டில வச்சி இருப்பதால் கச்ச எண்ணெய் கப்பல்கள் அந்த வழியாக வர முடியால சூழல் நீடிக்கிறது.
தடையை மாறி கப்பல்கள் சென்றால் தாக்குதல் நிச்சயம் என்று ஈரான் மிரட்டி வருகிறது.
இந்தியாவுக்கு மட்டும் அனுமதி
அதேசமயம் இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்கிற ஈரான், நமது நாட்டு கப்பல்கள மட்டும் அனுமதித்து வருகிறது. இருந்தாலும், ரஷ்யா, வெனிசுலாவில் இருந்தும் இந்தியா கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலையும் உயர்ந்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலரை கடந்து வர்த்தகமாகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு
இறக்குமதிச் செலவினங்களைச் சமாளிக்கும் பொருட்டு, உள்நாட்டிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
இதன் காரணமாக, கடந்த 15ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. 19ம் தேதி மறுபடியும் லிட்டருக்கு 90 பைசா வரை விலை அதிகரிக்கப்பட்டது.
3வது முறை விலை உயர்வு
இந்தநிலையில மூன்றாவது முறையா இன்னிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சென்னையில் பெட்ரோல் 87 காசுகள் உயர்ந்து 105.36 ரூபாய்க்கும், டீசல் 91 காசுகள் உயர்ந்து 97.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை 110 ரூபாய் மற்றும் 108 ரூபாயை கடந்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்
எண்ணெய் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக விலையை உயர்த்தாமல், படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
தொடர் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமான்ய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
====