சிக்கிம் 50 ஆண்டு பொன் விழா : பங்கேற்றார் பிரதமர் மோடி! சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி உற்சாக பதிவு!

சிக்கிம் மாநிலத்துக்கு இருநாள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
Prime Minister attends Sikkim's 50th Golden Jubilee, plays football with children
Prime Minister attends Sikkim's 50th Golden Jubilee, plays football with children google
1 min read

இரு நாள் பயணமாக சிக்கிம் சென்றுள்ள பிரதமர்

இருநாள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றுள்ளார் பிரதமர் மோடி .சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைப்பு

சிக்கிம் பொன் விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் ,அங்கு ரூ.4,000 கோடிக்கும் மேலான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

அதுமட்டுமின்றி, ஆர்கிட் மலர்கள் வளர்க்கப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆர்கிட் பூங்காவான கேங்டாக் பகுதியில் உள்ள ஸ்வர்ணஜெயந்தி மைத்ரி மஞ்சரி பூங்காவையும் அவர் பார்வையிட்டார். ு

சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி

மோடி அங்குள்ள சிறுவர்களுடன் கால்பந்து விளையாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது எக்ஸ் தலத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள மோடி

இது தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இனிமையான காங்டாக் காலையில், சிக்கிமில் உள்ள எனது இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதை போல் வேறு எதுவும் இல்லை என்றும்

இந்த இளைஞர்களுடன் இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் கால்பந்துப் பயிற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சாலைவலம் மேற்கொண்ட பிரதமர்

முன்னதாக, பிரதமர் மோடி சிக்கிம் சென்றதும் கேங்டாக் நகரில் நேற்று சாலைவலம் மேற்கொண்டார் . இந்தப் பயணம் திட்டம் கடந்தாண்டே திட்டமிடப்பட்ட நிலையில், அப்போது மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.

==============

logo
Thamizh Alai
www.thamizhalai.in