West Bengal : பெண்களுக்கு திரிணாமூல் துரோகம் : ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 : பிரதமர் மோடி பரப்புரை

இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேறாமல் தடுத்து, மகளிருக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் இழைத்து விட்டதாக, பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
Prime Minister Modi accused oopposition parties of betraying women, preventing the passage of Reservation Bill
Prime Minister Modi accused oopposition parties of betraying women, preventing the passage of Reservation Billgoogle
1 min read

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் 23 மற்றும் 29ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வு​கிறது.

பிரதமர் மோடி பரப்புரை

பாஜக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்​தார்.

” பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்​யும் மசோ​தாவை திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தோற்​கடித்​து​விட்​டன.

பெண்களுக்கு திரிணாமூல் துரோகம்

பெண்​களுக்கு துரோகம் இழைத்த திரிண​மூல் கட்சிக்கு வரும் தேர்​தலில் பெண்கள் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள். மேற்​கு ​வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்களுக்கு ரூ.5 லட்​சம் வரை மருத்துவ காப்​பீடு வழங்​கப்​படும்.

பெண்களுக்கு சலுகைகள்

பெண்​களின் குடும்​பத்​தில் யாருக்​காவது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் அவர்​களுக்கு அரசு மருத்​து​வ​மனை​களில் இலவச​மாக டயாலசிஸ் சிகிச்சை அளிக்​கப்​படும்.

மாதம் ரூ.3,000 உதவித்தொகை

மேற்​கு ​வங்க பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.3,000 உதவித் தொகை வழங்​கப்​படும். இதன்​படி ஆண்​டு​தோறும் பெண்​களுக்கு ரூ.36,000 வழங்​கப்​படும். மத்​திய அரசு சார்​பில் பெண்​களின் குழந்​தைப்​பேறுக்கு ரூ.21,000 அளிக்கப்​படும்.

பெண் குழந்தைகள் கல்வி - ரூ.50,000

பெண் குழந்​தைகளின் கல்விக்கு ரூ.50,000 வழங்​கப்​படும். பாஜக ஆட்சி அமைக்​கும்​போது மத்​திய அரசின் அனைத்து திட்​டங்​களும் அமல்​படுத்​தப்​படும். கடந்த 15 ஆண்​டு​களாக திரிண​மூல் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வரு​கிறது.

திரிணாமூல் மீது தாக்கு

ஆனால் மக்​களுக்கு எந்த பயனும் இல்​லை. கல்​வி, சுகா​தா​ரம், வேளாண்மை உள்​ளிட்ட துறை​களில் மாநிலம் மிக​வும் பின்​ தங்​கிய நிலை​யில் உள்​ளது. அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி உள்ளது.

சட்​டம், ஒழுங்கு பாதிக்​கப்​பட்டு மாநிலம் முழு​வதும் வன்​முறை சம்பவங்கள் அரங்​கேறி வரு​கின்​றன. மத்​தி​யில் ஆளும் பாஜக அரசே, வங்​க மொழிக்கு செம்​மொழி அந்​தஸ்தை வழங்​கியது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

விவ​சா​யிகளின் வாழ்க்​கை​யில் மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்படுத்​து​வோம். பாஜக ஆட்சி அமைத்​தால் நேர்மை​யான முறை​யில் அரசு பணிக்கு ஆட்​தேர்வு செய்​யப்​படும். எனது அனுபவத்​தின் அடிப்​படை​யில் மேற்​கு ​வங்​கத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படு​வது உறு​தி” இவ்​வாறு பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in