”புதுமை கண்டுபிடிப்புகள் மாநாடு”: பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான் பங்கேற்பு : இந்தியாவின் வளர்ச்சி குறித்து பெருமிதம்...!

பிரான்சில் தொடங்கிய பாரதத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மாநாட்டில், பிரதமர் மோடியும், அந்நாட்டு அதிபர் மேக்ரானும் கலந்து கொண்டனர்.
Prime Minister Modi and French President Macron participated in the 'New Innovations of India' conference held in France
Prime Minister Modi and French President Macron participated in the 'New Innovations of India' conference held in Francegoogle
1 min read

பிரான்சில் மோடி

அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’

நீஸ் நகரில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு தொடங்கியது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பார்வையிட்டனர்.

இந்திய நிறுவனங்களின் அரங்குகள்

இந்​தி​யா​வைச் சேர்ந்த 150-க்​கும் மேற்​பட்ட தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மாநாட்​டில் அரங்​கு​களை அமைத்​துள்​ளன. உலகம் முழு​வதும் இருந்து 500க்​கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​கள் கலந்து கொண்டுள்ளனர்.

பிரான்சுடன் நெருங்கிய நல்லுறவு

மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்​தியா - பிரான்ஸ் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. இரு நாடு​களும் ஒன்​றிணைந்து பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கின்​றன.

உலக நாடு​கள் எதிர்​கொள்​ளும் பல்​வேறு சவால்​களுக்கு இணைந்து தீர்வு காண்​கின்றன. சூரிய சக்​தி, செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) துறை​களில் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன.

‘இந்​தியா - பிரான்ஸ் புதுமை கண்​டு​பிடிப்​பு’ ஆண்டு

‘இந்​தியா - பிரான்ஸ் புதுமை கண்​டு​பிடிப்​பு’ ஆண்டாக இந்த ஆண்டை அறி​வித்​துள்​ளோம். இதன் ஒரு பகு​தி​யாகவே ‘பாரதத்​தின் புதுமை கண்​டுபிடிப்​பு​கள்’ மாநாடு நடைபெறுகிறது. இதன்​மூலம் இந்​தியா, ஐரோப்பிய நாடு​களின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் இடையே நேரடி தொடர்பு ஏற்​படும்.

இந்​தி​யா​வில் ஸ்டார்ட்​அப் புரட்சி

இந்​தி​யா​வில் ஸ்டார்ட்​அப் புரட்சி நடந்து வரு​கிறது. இந்தியாவில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் செயல்​படு​கின்​றன. ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​களைக் கொண்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தியா 3வது இடத்​தில் உள்​ளது.

இந்தியாவில் பெரிய மாற்றங்கள்

ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் கிராமங்​களில் வசிக்​கும் மக்​களின் வாழ்க்​கைத் தரம் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. ஹைட்​ரஜன் எரிசக்​தி, மின்​சார வாக​னங்​கள், புதிய பேட்​டரி தொழில்​நுட்​பங்​கள் என இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன.

அனைவருக்கும் ஏஐ தொழில்நுட்பம்

உலக நாடு​களின் தேவை​களை கருத்​தில் கொண்டு மனித குலத்​துக்கு சேவை​யாற்ற இந்​திய நிறு​வனங்​கள் புதிய தொழில்​நுட்​பங்​களைக் கண்​டு​பிடித்து வரு​கின்​றன. ஏஐ தொழில்​நுட்​பம் உலக மக்​கள் அனை​வருக்​கும் கிடைக்க வேண்​டும் என்​பதே இந்​தி​யா​வின் லட்​சி​யம்.

புதுமைகளை கண்டுபிடிக்கும் இந்தியர்கள்

புது​மை​களைக் கண்​டு​பிடிப்​பது இந்​தி​யர்​களின் மரபணுவோடு கலந்​திருக்​கிறது. ஒரு காலத்​தில் உலகத்​தின் தொழில்​நுட்​பங்​களைப் பயன்​படுத்​தும் நாடாக இந்​தியா இருந்​தது.

இப்​போது உலகத்​துக்கு தொழில்​நுட்​பத் தீர்​வு​களை வழங்​கும் நாடாக இந்​தியா உரு​வெடுத்​துள்​ளது” இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in