

மேற்காசிய போர்
மேற்காசிய போர் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் தட்டுப்பாடு என்ற அளவில் எதிரொலித்து வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு
பெட்ரோல், டீசல் சரளமாக கிடைத்தாலும், சிஎன்ஜி எரிபொருளுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது.
வாகனங்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்தே எரிபொருளை நிரப்பி செல்கின்றன. சமையல் எரிவாயு 30 நாட்கள் கழித்து புக் செய்தாலும், பல நாட்கள் கழித்து தான், சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது.
சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளன. எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்
இந்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். தேசத்தின் நலன் கருதி பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட. இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும்.
எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும்
பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் மற்றும் டீசலைச் சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நம் எல்லோரது பொறுப்பாகும்.
இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும் உள்ளது. அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இது தேசபக்திக்கு சிறந்தவொரு பங்களிப்பாக இருக்கும்.
அந்த வகையில் பொதுமக்களுக்கு 7 வகையான வேண்டுகோள்களை, பிரதமர் மோடி விடுத்து இருக்கிறார்.
1. கொரோனா காலத்தை போன்று, வீட்டில் இருந்து பணியாற்றுவது, ஆன்லைனில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும்.
2. பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க முடிந்த அளவு முயற்சிக்க வேண்டும். பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
3. அடுத்த ஓராண்டு காலத்துக்கு திருமணம் உள்ளிட்டவற்றுக்கு தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்வதால் அந்நிய செலவாணி அதிகமாகிறது.
4. ரசாயன உரங்களை அதிக அளவில் வாங்குவதை தவிர்த்து, அதை பாதியளவாக குறைக்க வேண்டும்.
5. சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.
6. வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை தவிர்த்து, சுதேசி பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
7. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்
==================