நீண்டகால பிரதமர் பதவி மோடிக்கு 2 வது இடம்
முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஜனவரி 24ம் தேதி, 1966ம் ஆண்டு முதல் மார்ச் 24ம் தேதி, 1977ம் ஆண்டு வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த இந்திராவின் சாதனையை கடந்த 2025ம் ஆண்டே பிரதமர் மோடி முறியடித்து பட்டிலியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
தொடர்ந்து பிரதமராக நீடிப்பு
பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தற்போதைய பிரதமர் மோடி 2002, 2007, 2012ல் குஜராத் தேர்தல்களிலும், பின்னர் 2014, 2019 மற்றும் 2024ல் லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெற்று, சாதனை படைத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
12 ஆண்டுகள் நிறைவு : ராஜ்நாத் சிங் வாழ்த்து
பிரதமராக பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதை அடுத்து , பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்
வாழத்து குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது
மே 26, 2014 அன்று, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. மோடி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற அந்த நாள், நாட்டின் நிர்வாகம், தலைமைத்துவம் மற்றும் தேசிய உறுதிப்பாடு ஆகியவற்றில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை ஏற்படுத்திய நாளாக அமைந்தது என்றும் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்
மோடி தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் தாய்நாட்டிற்கும், தனது சக நாட்டு மக்களுக்கும் சேவை செய்வதிலேயே அர்ப்பணித்துள்ளார். அவரது அயராத உழைப்பு, அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் நாட்டிற்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஆகியவை லட்சக்கணக்கான மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகின்றன.
நாட்டிற்குத் தொடர்ந்து சேவையாற்ற அவருக்குச் சிறந்த உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் நீடித்த வலிமையை இறைவன் அருள வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று ராஜ்நாத் சிங் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .
==================================