world's most popular leader : செல்வாக்கு மிக்க தலைவர், 68% ஆதரவோடு பிரதமர் மோடி முதலிடம் : டிரம்பிற்கு 38% ஆதரவு...!

world's most popular leader Modi : உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
Prime Minister Modi continues to top the list of the world's most influential leaders
Prime Minister Modi continues to top the list of the world's most influential leadersgoogle
1 min read

ஆய்வு நிறுவனம் கருத்துக் கணிப்பு

Indian Prime Minister Narendra Modi is ranked the world's most popular leader with a 68% approval rating : அமெரிக்​காவைச் சேர்ந்த மார்​னிங் கன்​சல்ட் என்ற ஆய்வு நிறு​வனம், பல்​வேறு நாட்​டுத் தலை​வர்​களின் செயல்​பாடு​கள் குறித்து கருத்​துக்​கணிப்பு ஒன்றை நடத்​தி​யது.

ஜனநாயக நாடுகளில் கணிப்பு

இந்த ஆய்​வின் முடிவு​கள் தற்​போது வெளி​யாகி​யுள்​ளன. அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: 24 ஜனநாயக நாடு​களில் நடத்​தப்​பட்ட ஆய்​வில் பெரு​வாரி​யான மக்​களின் ஆதர​வு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி முதலிடம்

68 சதவீத மக்​களின் ஆதர​வுடன் இந்​தி​யப் பிரதமர் நரேந்​திர மோடி உலகின் மிக​வும் செல்​வாக்கு மிக்க தலை​வ​ராகத் தொடர்ந்து முதலிடத்​தில் உள்​ளார்.

தென்கொரிய அதிபருக்கு 2வது இடம்

இவருக்கு அடுத்​த​படி​யாக தென் கொரிய அதிபர் லீ ஜே-மி​யுங் 63 சதவீத ஆதர​வுடன் இரண்​டாம் இடத்​தை​யும், செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரே பாபிஷ் 55 சதவீத ஆதர​வுடன் மூன்​றாம் இடத்​தை​யும் பிடித்​துள்​ளனர்.

செல்வாக்கு குறைந்த தலைவர் ஜெர்மனி பிரதமர்

மறு​புறம், ஜெர்​மனி பிரதமர் பிரெடரிக் மெர்​ஸின் செயல்​பாடு திருப்​தி​கர​மாக இல்லை என்று அந்த நாட்டு மக்​களில் சுமார் 76 சதவீதம் பேர் தெரி​வித்​துள்​ளனர். இதன் மூலம் உலக அளவில் செல்​வாக்கு குறைந்த தலை​வர்​கள் பட்​டியலில் அவர் முதலிடத்​தில் உள்​ளார்.

இவருக்கு அடுத்​த​படி​யாக பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் 75 சதவீத மக்​களின் அதிருப்​தி​யைப் பெற்​று, செல்​வாக்கு குறைந்த தலை​வர்​களில் இரண்​டாம் இடத்​தில் உள்​ளார்.

டிரம்பிற்கு 39% ஆதரவு தான்

ஈரான் உடனான போர்ச் சூழலுக்கு மத்​தி​யிலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 38 சதவீத மக்​களின்​ ஆதர​வைப்​ பெற்​றுள்​ளார்​. இவ்​​வாறு அந்​த ஆய்​வில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in